இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போன் Realme X50 Pro 50ஆயிரம் இருக்கும்.

HIGHLIGHTS

டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு புதிய டீசரில் தெரிவித்துள்ளது.

புதிய ரியல்மி எர்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட்போன் Realme X50 Pro 50ஆயிரம் இருக்கும்.

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Realme X50 Pro  5 ஜி-ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது இந்தியாவின் முதல் 5 ஜி-ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது. இந்த தொலைபேசியின் விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கலாம் என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “2018 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த ரியல்மே, பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் முதல் 5 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தப் போகிறது. இருப்பினும், 5 ஜி நெட்வொர்க் இந்தியாவில் இன்னும் கிடைக்கவில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ரியல்மி பிராண்டின் புதிய எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களை அந்நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என ரியல்மி பிராண்டு புதிய டீசரில் தெரிவித்துள்ளது.

இவற்றில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 105 டிகிரி அல்ட்ராவைடு ஆங்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது. அல்ட்ராவைடு ஆங்கில் கேமராவின் ரெசல்யூஷனை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. புதிய ரியல்மி எர்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை அந்நிறுவனம் பிப்ரவரி 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதுதவிர ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 20x சூம் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் அல்ட்ராவைடு கேமரா மூலம் வீடியோக்களை போர்டிரெயிட் பிளர் செய்து எடுக்கும் அம்சம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இதில் பிர்தயேக நைட் மோட் வழங்கப்படலாம் என்றும் இதில் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டிஸ்ப்ளே அதிகபட்சம் 90 ஹெர்ச்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரஸ்ட் ரெட் மற்றும் மாஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே வெளியிட்ட தகவல்களில் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்தது. எனினும், இதில் சாம்சங் சென்சார் வழங்கப்படுமா அல்லது சோனி சென்சார் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

போனில் இருக்கும் 865லேட்டஸ்ட் ப்ரோசெசர் 

Realme X50  ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் Realme யு.ஐ., 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.5 ஜி போனின் விலை யூனிட்டுக்கு ரூ .25,790 ஆக இருக்கலாம். எதிர்காலத்தில் தயாராகும் தயாரிப்புகளை பயனர்களுக்கு வழங்க நிறுவனம் விரும்புகிறது என்று Realme அதிகாரி கூறினார்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo