Huawei நிறுவனம் Y7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய Y7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் HD . பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது
Huawei நிறுவனம் Y7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனினை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய Y7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் HD . பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
கிரேடியன்ட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் Huawei Y7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், டூயல் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 4000Mah . பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Survey
✅ Thank you for completing the survey!
போட்டோக்கள் எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ், AI சீன் டிடெக்ஷன், 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார் வழங்கப்படாத நிலையில் புதிய Huawei ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
விலை Huawei Y7 ப்ரோ 2019 ஸ்மார்ட்போன் அரோரா புளு மற்றும் பிளாக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 171 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ.11,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile