ஹவாய் P20 ப்ரோ இந்தியாவில் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகியது.

Updated on 05-May-2018
HIGHLIGHTS

ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகும்.  

ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 970 10 என்எம் i7 கோ-பிராசஸர், பிரத்யேக நியூரல் நெட்வொர்க், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கிறது.  

போட்டோக்களை எடுக்க ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 40 எம்பி (RGB, f/1.8) + 20 எம்பி (Monochrome, f/1.6) + 8 எம்பி (Telephoto, f/2.4), கேமரா, லெய்கா VARIO-SUMMILUX-H lலென்ஸ், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், லேசர் ஃபோகஸ், டீப் ஃபோகஸ், PDAF, CAF, 960fps சூப்பர் ஸ்லோ-மோ உள்ளிட்ட கேமரா அம்சங்களை கொண்டுள்ளது.

ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் 2240×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU, NPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1
– சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
– 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி லெய்கா VARIO-SUMMILUX-H லென்ஸ்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், f/2.0
– கைரேகை சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போன் மிடநைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹூவாய் P20 ப்ரோ அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹூவாய் P20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.64,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதி துவங்க இருக்கிறது.

புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போனில் 5.84 இன்ச் FHD பிளஸ் + 19:9 ஸ்கிரீன், நாட்ச், கிரின் 659, 4ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம், 16 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஹூவாய் P20 லைட் சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 659 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
– மாலி-T830 MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் கிளைன் புளு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை மே 3-ம் தேதி துவங்குகிறது

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :