Huawei Mate XS மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம், Galaxy பிலிப் உடன் சரியான போட்டியாக இருக்குமா ?

Huawei Mate XS மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்  அறிமுகம், Galaxy  பிலிப் உடன் சரியான போட்டியாக இருக்குமா ?
HIGHLIGHTS

மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 6.6 இன்ச் OLED ஸ்கிரீன், முன்புறம் 6.38 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது

ஹூவாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் மேட் எக்ஸ்.எஸ். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைன் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 6.6 இன்ச் OLED ஸ்கிரீன், முன்புறம் 6.38 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை திறக்கும் போது 8.0 இன்ச் ஸ்கிரீன் கிடைக்கிறது. 

Huawei Mate XS  சிறப்பம்சங்கள்:

– 6.6 இன்ச் 2480×1148 பிக்சல் 19.5:9 OLED டிஸ்ப்ளே (மடிக்கப்பட்ட நிலையில்)
– 6.38 இன்ச் 2480×892 பிக்சல் OLED 25:9 பின்புறம் பேக் பேனல் டிஸ்ப்ளே
– 8.0 இன்ச் 2480×2200 பிக்சல் OLED 8:7.1 டிஸ்ப்ளே (திறக்கப்பட்ட நிலையில்)
– ஹூவாய் கிரின் 990 5ஜி பிராசஸர்
– ARM மாலி-G76MP16 GPU, டூயல் பி்க் கோர் + டைனி கோர் NPU
– 8 ஜி.பி. LPDDR4x ரேம்
– 512 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10.0.1, HMS
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8
– 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 2.5 செ.மீ. மேக்ரோ
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, OIS
– ஹூவாய் TOF கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் ஸ்பீக்கர்கள்
– 5ஜி மல்டி-மோட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 LE
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4500 Mah .பேட்டரி
– 55 வாட் சூப்பர்சார்ஜ் 

ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பவர் பட்டனிலேயே பொருத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் 40 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் ToF சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்புற டிஸ்ப்ளே பயன்படுத்தி, பிரைமரி கேமரா கொண்டும் செல்ஃபி எடுக்க முடியும். 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டுள்ள மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போனில் 55 வாட் ஹூவாய் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனை 0 முதல் 85 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே போதுமானது.

இதன் வடிவமைப்பு பார்க்க முந்தைய மேட் எக்ஸ் போன்றே காட்சியளிக்கிறது. முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய மாடலும் 5.4 எம்.எம். அளவு மெல்லியதாக இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை கிரின் 990 5ஜி பிராசஸர், ஆண்ட்ராய்டு மற்றும் EMUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் கூகுள் பிளே சேவைக்கு மாற்றாக ஹூவாய் மொபைல் சர்வீசஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

Galaxy Z Flip உடன் சரியான போட்டியானதாக இருக்குமா 

ஹவாய் மடிக்கக்கூடிய போன் சாம்சங்கின் கேலக்ஸி இசட் ஃபிளிப் உடன் போட்டியிடும். ஹூவாய் முன்னதாக மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. ஹவாய் மேட் எக்ஸ் திறக்கும், இது 8 அங்குல மடக்கு OLED டேப்லெட் டிஸ்பிலேவை காட்டுகிறது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனை அணைத்த பிறகு, இது 6.6 அங்குல திரை கொண்ட ஸ்மார்ட்போனாக மாறும்.ஸ்மார்ட்போனில் 6.6 அங்குல பிரதான காட்சி 2480×1148 பிக்சல்கள் மடிப்புடன் உள்ளது. இந்த விரிவடைந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 8 அங்குல பிரதான காட்சி கிடைக்கும், இது 2480×2200 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்டது. மடிந்தால், அதன் பின்புற டிஸ்பிளே 6.4 இன்ச் ஆகும்..

விலை தகவல்.

ஹூவாய் மேட் எக்ஸ்.எஸ். ஸ்மார்ட்போன் இன்டர்ஸ்டெல்லார் புளூ நிறத்தில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 2706 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,95,425) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo