huawei மற்றும் Honor ஸ்மார்ட்போனுக்கு தடை

huawei மற்றும் Honor ஸ்மார்ட்போனுக்கு  தடை
HIGHLIGHTS

மெரிக்க அரசு ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை

இந்த தடை உத்தரவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஹவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதனால் கூகுள் நிறுவனம் ஹவாய் போன்களுடனான வியாபார ஒப்பந்தங்களையும், சேவைகளும் நிறுத்துவதாக அறிவித்தது. அத்துடன் கூகுள் மூலம் அதற்கு வழங்கப்பட்ட ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர்களின் உரிமங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தது.

இதனுடன்  கூகுள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் வழங்கப்படாது என  அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது இதனுடன் இந்த  அறிவிப்பின் கீழ்   கூகுள் பிளே என்ற கேம் வசதிகளும், பாதுகாப்பு சேவையையும்மற்றும் கூகுள்  பிளே ஸ்டோர் ஸ்டார் போன்ற எந்த வசதியும் ஹவாய் போன்களுக்கு தரப்பட்டது என கூறப்பட்டுள்ளது  மேலும்  அமெரிக்காவில்  இந்த ஹவாய் மற்றும் அதன் சப் ப்ராண்டான Honor ஸ்மார்ட்போன்களுக்கு  முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது 

மேலும் இந்நிலையில் இந்த தடை உத்தரவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க வர்த்தகத்துறை அறிவித்துள்ளது. திடீர் தடையால் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய அளவிலான பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் தடை உத்தரவை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் தடை தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்படுவதாகவும், விதிக்கப்பட்ட தடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் ஹவாய் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதனை  தொடர்ந்து  இந்த அறிவிப்பானது முற்றிலும்  செயல்படுத்த படுமா அல்லது நீக்கப்படுமா என்பது 90 நாட்களுக்கு பிறகு தெரிய  வரும் மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு  ஆண்ட்ராய்டு சேவைகளையும் வழங்கப்படாது  என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

இதனுடன் huawei  சொந்தமாக தனக்கு ஆப் ஸ்டோர்  ஒன்று  தயார்  செய்து வருகிறது, ஆனால்  மக்கள் மத்தியில் அது எந்த அளவுக்கு  வளர்ச்சி  அடையும் என்பதை பற்றி தெரியவில்லை மேலும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு  அப்டேட்கள் என ஏதும் கிடைக்காது என கூறப்பட்டுள்ளது மேலும் huawei  ஸ்மார்ட்போன்கள்  மற்றும் Honor ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்களின் சற்று அதிர்ச்சியில் தான்  இருக்கிறார்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo