இளைஞர்களே உஷார் செல்போன் அதிக பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி தகவல்.

HIGHLIGHTS

செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்

இளைஞர்களே  உஷார்  செல்போன்  அதிக  பயன்படுத்தினால்  கொம்பு  முளைக்கும்  அதிர்ச்சி  தகவல்.

நம்  நாட்டில் தற்பொழுது  செல்போன் பயன்படுத்தி  வரும்  நிலை பல மடங்கு  அதிகமாகியுள்ளது மேலும் நாம்  எந்த ஒரு  சிறிய வேலையாக  இருந்தாலும்  சரி  செல்போன்  நம்பி  தான்  இருக்கிறோம் அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, மேலும் தற்பொழுது  வரும் அனைத்து ஸ்மார்ட்போன்களையும்  பல மடங்கு அதிக தொழில்நுட்பத்துடன் வருகிறது, மேலும்  அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது என்பதை பற்றி நமக்கு தெரிவதில்லை.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆனால், இந்த ஆய்வு கொம்பு முளைக்கும், ஆனால் காரணம்தான் வேறு என்பதை கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகித்தால் எப்படி கொம்பு முளைக்கும், ஆராய்ச்சியாளர்களின் பதில்கள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!

 சமீபத்தில் நாம்  அதிக  கதிரவிச்சை  தரும் ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்த்திருப்போம், செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

உயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர்.

மேலும் ஒருவர் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில், அவர் நீண்டே நேரம் தலையை குனிந்தபடியே இருப்பார். இதன் அப்போதைய விளைவு கழுத்து வலி போன்று சிறிய பாதிப்பாக இருக்கும். ஆனால், இது அதிக நாட்களுக்கு தொடர்ந்தால், இதன் பாதிப்பு வேறு மாதிரி பெரிதாக இருக்கும். அந்த பெரிய பாதிப்பு எப்படியாக இருக்குமேன்றால், ஒருவரின் தலை மண்டையோட்டில் எழும்பு வளர்ச்சியாக இருக்கும். இந்த எழும்பு தலையின் பின்புறத்தில் கழுத்தில் மேலுள்ள மண்டையோட்டு பகுதியில் வளரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கழுத்தின் மேல் பகுதியில் வளரும் இந்த எழும்பு கொம்பு போலவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செல்போனில்  எவ்வளவு தன் புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் அவை யாவும் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக  அளிக்க தான்  செய்கிறது  செல்போன்  பயன்படுத்துவது  தவறில்லை  ஆனால்  ஒருவர் எந்த  நேரமும் செல்போனில்  மூழ்கி  கிடப்பது  தவறு.

மேலும் தற்பொழுது  இளைஞர்  தலைமுறை  அதிக  செல்பி எடுப்பதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்கள்  அத்தகைய  செயலால்  தோல்  நோய்  ஏற்ப்படுகிறது, எனவே அதிக  தொழில் நுட்ப வளர்ச்சி  பெரும் ஆபத்து  இதன்  மூலம்  எதையும் அளவோடு  பயன்படுத்தினால்  நல்லது அளவுக்கு அதிகம் பயன்படுத்தினால்  பல இன்னல்களை சந்திக்க நேரிடும்.

அளவுக்கு  மீறினால் அமிர்தமும்  நஞ்சு  என்பது  ஒரு நல்ல  உதாரணம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo