Honor புதிய Honor X9b இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, smartwatch மற்றும் earbuds வந்துள்ளது

Honor புதிய Honor X9b இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, smartwatch மற்றும் earbuds வந்துள்ளது
HIGHLIGHTS

Honor சந்தையில் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும்விதமாக இன்று Honor X9b ஐ அறிமுகப்படுத்தியுள்ளது

இதனுடன் Honor Choice Watch மற்றும் Honor Choice X5 போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது

Honor X9b யில் ஒரு பெரிய 5800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

Honor சந்தையில் அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தும்விதமாக இன்று Honor X9b ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இதனுடன் Honor Choice Watch மற்றும் Honor Choice X5 போன்றவற்றையும் அறிமுகம் செய்துள்ளது Honor X9b யில் ஒரு பெரிய 5800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. TWS Honor Choice X5 சிறந்த ஆடியோவை வழங்குகிறது. ஹானர் சாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது உடற்பயிற்சி கண்காணிப்புக்கான ஹானர் ஹெல்த் செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது இந்தியாவில் இணைக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கே நாங்கள் உங்களுக்கு Honor X9b, Honor Choice Watch மற்றும் Honor Choice X5 Earbuds தெளிவாக பார்க்கலாம்.

Honor X9b, Honor Choice Watch மற்றும் Honor Choice X5 இயர்பட்ஸ் விலை தகவல்.

Honor X9b விலை பற்றி பேசுகையில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 25,999 ரூபாயாக இருக்கிறது. இந்த போனின் விற்பனை பிப்ரவரி 16ம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும். வாடிக்கையாளர்கள் ICICI Bank பணம் செலுத்தி ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடியாக ரூ.3,000 தள்ளுபடியைப் பெறலாம். இதன் முதல் விற்பனையின் கீழ் 5,000ரூபாய் கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம். மேலும் இதில் வாடிக்கையாளர்கள் 6 மாதங்களுக்கு நோ காஸ்ட் EMI வசதியையும் பெறுவார்கள். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, பிராண்ட் ரூ.699 மதிப்புள்ள இலவச சார்ஜரை வழங்குகிறது. 2,999 மதிப்பிலான Onsitego வழங்கும் இலவச Honor Protect திட்டத்தையும் Honor வழங்கியுள்ளது, இதில் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் 30 நாட்களுக்கு 90 சதவிகிதம் வரை பைபேக் போன்ற பலன்கள் அடங்கும்.

Honor Choice Earbuds X5 யின் விலை 1,999 ரூபாய்க்கு இருக்கிறது, இதன் விற்பனை பிப்ரவரி 16 அன்று 12 மணிக்கு ஆரம்பமாகும். Honor Choice Watch யின் விலை 6,499 ரூபாயாகும் ரூ.500 அறிமுக சலுகையுடன் ரூ.5,999க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் பிப்ரவரி 24, 2024 முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும். இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் பிராண்டின் வெப்சைட் உள்ளிட்ட சில்லறை விற்பனை கடைகளில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இயர்பட்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

Honor X9b சிறப்பம்சம்.

Honor X9b யில் 6.78 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 1.5K 120Hz ரெப்ராஸ் ரேட் 1.07 பில்லியன் கலர்கள் மற்றும் 100% DCI-P3 அடங்கியுள்ளது. இந்த போனில் 5800 mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இருப்பினும் பாக்ஸில் எந்த சார்ஜரும் இல்லை. ஆனால் இலவச சார்ஜர் அறிமுக சலுகையாக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 மேம்பட்ட இயங்குதளத்தில் செயல்படுகிறது. HONOR X9b ஆனது octa core Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசரை கொண்டுள்ளது.

Honor X9b யின் பின் கேமரா 108 மேகபிக்சல் ப்ரைமரி கேமரா 5MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஃபோனில் 8ஜிபி ரேம் உள்ளது, இதை கூடுதலாக 8ஜிபி முதல் 16ஜிபி வரை விரிவாக்கலாம். மற்றும் 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வழங்கப்படுகிறது. Honor X9b ஆனது ஹானர் அல்ட்ரா-பவுன்ஸ் ஆண்டி-ட்ராப் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது நீடித்து ட்யுரேபிளிட்டிமற்றும் ஸ்டெபிளிட்டி வழங்குகிறது. ஃபோனைச் சுற்றி அதிர்ச்சி-உறிஞ்சும் கட்டமைப்பைக் கொண்ட அதன் தனித்துவமான ஏர்பேக் தொழில்நுட்பம் 1.5 மீட்டர் வரை சொட்டுகளுக்கு எதிர்ப்பை வழங்குகிறது. அல்ட்ரா-பவுன்ஸ் தொழில்நுட்பத்தின் கீழ் இந்த போன் டிராப் மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பை வழங்குகிறது, இது 15-வினாடி நீர் மூழ்கி சோதனை மற்றும் IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிச்டண்டின் மூலம் சரிபார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:Jio வெறும் 599 ரூபாயில் 13 OTT,550+ TV மற்றும் 1000GB டேட்டா மற்றும் பல நன்மை

Honor Choice Watch சிறப்பம்சம்

Honor Choice Watch யில் 1.95 இன்ச் யின் AMOLED அல்ட்ரா தின் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதில் பில்ட் இன் GPS மற்றும் ஒரே கிளிக்கில் SOS அழைப்பு போன்றவை அடங்கும். இதற்க்கு நடுவில் Honor Health ஆப் வருகிறது அது உங்களின் ஹெல்த்தை மானிட்டர் செய்ய மற்றும் ஹெல்த் ஹெல்த் நன்மைக்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், இந்த கடிகாரத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. விளையாட்டு பிரியர்களுக்கு, 120 ஒர்க்அவுட் முறைகள் உள்ளன, இதில் வெளிப்புற மற்றும் உட்புறம் அடங்கும். இந்த கடிகாரத்தில் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் இருப்பதால் நீச்சல் அடிக்கும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது.

Choice X5 இயர்பட்ஸ் சிறப்பம்சம்.

Honor Choice X5 ई இயர்பட்ஸ் பற்றி பேசும்போது 30dB எக்டிவ் நோய்ஸ் கேன்சிலேசன் (ANC) கொடுக்கப்பட்டுள்ளது பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், இயர்பட்களை கேஸுடன் 35 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. Companium ஆப்ஸ் இந்த இயர் டிசைன் இயர்பட்களுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo