Honor View20 48 மெகாபிக்ஸல் கேமரா உடன் அறிமுகமானது…!

HIGHLIGHTS

ஹூவாய் Honor பிரான்டு ஏற்கவே அறிவித்தப்படி தனது வியூ20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது

Honor View20  48  மெகாபிக்ஸல்  கேமரா உடன்  அறிமுகமானது…!

ஹூவாய் Honor  பிரான்டு ஏற்கவே அறிவித்தப்படி தனது வியூ20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய வியூ20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD . பிளஸ் ஸ்கிரீன், 25 எம்.பி. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. போட்டோக்கள் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட ஹெச்.டி.ஆர். வசதி கொண்டுள்ளது.

Honor View 20 சிறப்பம்சங்கள்:

– 6.4 இன்ச் 1080×2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
– TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 mah  பேட்டரி
– சூப்பர் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.

கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை 
Honor View 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட ஹானர் வியூ20 விலை ரூ.37,999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் Honor View20 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை இன்று நள்ளிரவு துவங்குகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile