இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா உடன் அறிமுகமானது Honor V 20 ஸ்மார்ட்போன்

Updated on 27-Dec-2018
HIGHLIGHTS

ஹூவாய் Honor பிரான்டு V20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய வி20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD பிளஸ் டிப்பிலே கொடுள்ளது

ஹூவாய் Honor பிரான்டு V20 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய வி20 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் HD  பிளஸ்  டிப்பிலே  கொடுள்ளது 

இந்த ஸ்மார்ட்போனில் கிரின் 980 சிப்செட், GPU டர்போ 2.0, லிக்விட் கூலிங் மற்றும் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. போட்டோக்கள் எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 1/2-டைப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் போட்டோக்களை 12 எம்.பி. தரத்தில் வழங்குவதோடு நான்கு மடங்கு மேம்படுத்தப்பட்ட HDR . வசதி கொண்டுள்ளது. 

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்கிரீன், 25 MP. செல்ஃபி கேமரா வெறும் 4.5 எம்.எம். கட்-அவுட் இடைவெளியில் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் TOF 3டி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதனால் கேம்களை 3டி ஜெஸ்ட்யூர் மூலம் விளையாட முடியும். இத்துடன் இதில் வழங்கப்பட்டுள்ள லின்க் டர்போ தொழில்நுட்பம் பயனரின் நெட்வொர்க் மாடல்களை புரிந்து கொண்டு வைபை மற்றும் 4ஜி நெட்வொர்க்களிடையே தேர்வு செய்து கொள்ளும்.

இதனுடன் கிளாஸ் பேக் மற்றும் மெட்டல் ஃபிரேம் கொண்ட ஸ்மார்ட்போனின் பின்புறம் வி வடிவ டெக்ஸ்ச்சர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் பிங்காரப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ள ஹானர் வி20 ஸ்மார்ட்போன் 4000 Mah  பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது . இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

Honor V 20 சிறப்பம்சங்கள்

– 6.4 இன்ச் 1080×2310 பிக்சல் FHD+ எல்.சி.டி. ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
– ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
– மாலி-G76MP10 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, AIS
– TOF 3D இரண்டாவது பிரைமரி கேமரா
– 25 எம்.பி. செ்ஃபி கேமரா, f/2.0
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், USB . டைப்-சி
– 4000 Mah . பேட்டரி
– 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விலை மற்றும் விற்பனை 

ஹானர் வி20 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,428) என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் 3499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.35,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மொஷினோ (MOSCHINO) எடிஷன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. ஸ்டோரேஜ்  மாடலின் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,560) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :