புதிய Honor Play ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 6 தேதி அறிமுகமாகும்

HIGHLIGHTS

இந்தியாவில் ஹானர் பிளே 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாக இருக்கிறது

புதிய Honor Play  ஸ்மார்ட்போன்  இந்தியாவில் ஆகஸ்ட் 6 தேதி அறிமுகமாகும்

ஹவாய் Honor புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 6ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சில தினங்களுக்கு முன் ஹானர் 9N ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்நிலையில், ஆகஸ்டு முதல் வாரத்தில் வெளியாக இருக்கும் ஹானர் ஸ்மார்ட்போன் ஹானற் பிளே என அழைக்கப்படும் என்றும் இது அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 Honor Play  ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 ரக டிஸ்ப்ளே, கிரின் 970 10NM பிராசஸர், 6 ஜிபி ரேம், NPU மற்றும் GPU டர்போ கிராஃபிக்ஸ் பிராசஸிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் கிராஃபிக்ஸ் திறனை மேம்படுத்தி கேமிங்கின் போதும் வேகமான மற்றும் ஹேங் ஆகாத வகையில் பார்த்துக் கொள்ளும்.

Honor Play சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் ஹானர் பிளே 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாக இருக்கிறது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 2399 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,360) என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் என்பது அடுத்த மாதம் தெரியவரும். #honorplay #smartphone

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo