Honor மேஜிக் 2 ஒரு 3D பேஸ் அன்லோக் வசதியுடன் உருவாகிறது..!

Honor மேஜிக் 2 ஒரு 3D பேஸ்  அன்லோக்  வசதியுடன்  உருவாகிறது..!
HIGHLIGHTS

ஹூவாயின் துணை பிராண்டு ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது

ஹூவாயின் துணை பிராண்டு ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகமானது. ஸ்லைடர் வசதியுடன் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. 

இதன் ஸ்லைடிங் அம்சம் மூலம் முன்பக்கம் மூன்று செல்ஃபி கேமராக்களை வழங்கவும், பெசல் எதுவும் இல்லாத ஃபுல் டிஸ்ப்ளே வடிவமைப்பை வழங்க வழி செய்தது. இத்துடன் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் கிரின் ஹைசிலிகான் 980 சிப்செட், 6 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தற்சமயம் வெய்போவில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் பிராண்டு மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் 3D வெர்ஷனை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. புதிய D வெர்ஷன் முன்பக்க செல்ஃபி கேமராக்களுடன் ஸ்டிரக்சர்டு லைட் 3D ஸ்கேனருடன் வரும் என கூறப்படுகிறது. 

இந்த ஸ்மார்ட்போனின் 3D ஸ்கேனர் பயனரின் முகத்தில் இருக்கும் 10,000 புள்ளிகளை ஸ்கேன் செய்து இருள் நிறைந்த பகுதிகளிலும் முக அங்கீகார மென்பொருளை அதிக பாதுகாப்பானதாக மாற்றும். இத்துடன் கிரின் 980 சிப்செட் மற்றும் கிராஃபீன் கூலிங் பேட் உடன் வருகிறது. இதனால் இதில் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இதன் விலை 5799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.61,392) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. வைடு-ஆங்கிள் லென்ஸ், 24 எம்.பி. மோனோக்ரோம் மற்றும் 16 எம்.பி. வைடு-ஆங்கிள் சென்சார் கொண்டிருக்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 2280×1080 பிக்சல் ரெசல்யூஷன், எட்ஜ்-டு-எட்ஜ் டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 7 என்.எம். சிப்செட், 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. அல்லது 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo