புதிய HONOR 9X 16Mp பாப்-அப் கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம்.

புதிய  HONOR 9X 16Mp  பாப்-அப் கேமராவுடன் பட்ஜெட்  விலையில் அறிமுகம்.
HIGHLIGHTS

புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, கிரின் 710எஃப் சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் EMUI 9.1 வழங்கப்பட்டுள்ளது

Huawei HONOR பிராண்டு இந்தியாவில் HONOR 9X ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

HONOR 9X சிறப்பம்சங்கள்:

– 6.59 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 எஃப் பிராசஸர்
–  ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.1.1
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 0.8μm பிக்சல், f/1.8
– 8 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் சென்சார், f/2.4
– 2 எம்.பி. டெப்த் கேமரா, f/2.4
– 16 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, f/2.2
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 Mah பேட்டரி

புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் FHD பிளஸ் நாட்ச் இல்லா டிஸ்ப்ளே, கிரின் 710எஃப் சிப்செட், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் EMUI 9.1 வழங்கப்பட்டுள்ளது.புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்.பி. போர்டிரெயிட் கேமரா, பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் 4000Mah  பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை.

ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஜனவரி 19-ம் தேதி துவங்குகிறது. முதல் விற்பனையில் ஹானர் 9எக்ஸ் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12,999 விலையில் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo