Honor 7A, மற்றும் Honor 7C பேஸ் அன்லாக் மற்றும் இரட்டை பின்புற கேமரா உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

Honor 7A, மற்றும் Honor 7C பேஸ் அன்லாக் மற்றும் இரட்டை பின்புற கேமரா உடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது
HIGHLIGHTS

இந்த ஹானர் 7A ஆரம்ப விலை Rs 8,999 இருக்கிறது மற்றும் ஹானர் 7C ஆரம்ப விலை Rs 9,999 இருக்கிறது

ஹூவாய் ஆன்லைன் பிரான்டு ஹானர் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன்கள் முறையே 5.7 இன்ச் மற்றும் 5.99 இன்ச் ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளேக்களை கொண்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செல்ஃபிக்களை எடுக்க 8 எம்பி முன்பக்க கேமரா மற்றும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருப்பதோடு முக அங்கீகார வசதியும், ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 3000 mah பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Honor 7A சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி

Honor 7C   சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 எம்ஏஹெச் பேட்டரி

ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்கள் பிளாக் கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வெப்சைட்டில் பிரத்யேகமாகவும், Honor 7C  ஸ்மார்ட்போன் அமேசான் வெப்சைட்டில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஹானர் இந்தியா ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் அதிகபட்சம் 50 ஜிபி மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo