புதிய நோக்கியா X6 மே 29 அன்று அறிமுகமாகிறது

புதிய நோக்கியா X6 மே 29 அன்று அறிமுகமாகிறது
HIGHLIGHTS

HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை மே 29-ம் தேதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது

HMD  குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை மே 29-ம் தேதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் புதிய சாதனம் நோக்கியா X6 சர்வதேச மாடலாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா X6 ஸ்மார்ட்போனில் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருந்தது, இது ஸ்மார்ட்போனினை 0-50% சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே எடுத்துக் கொள்கிறது.

ஏற்கனவே வெளியான தகவல்களில் நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களை ஹெச்எம்டி குளோபல் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கபக்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா மொபைல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் மே 29-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு மாஸ்கோ நேரப்படி இரவு 7.40 மணி (இந்திய நேரப்படி இரவு 10.10 மணி) துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் படி மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் நோக்கியா X6 ஸ்மார்ட்போனின் சர்வேதச மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் சர்விகாஸ் நோக்கியா X6 சர்வதேச மாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கேட்டிருந்தார்

நோக்கியா X6 சிறப்பம்சங்கள்:

– 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆன்ட்ராய்டு பி அப்டேட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், f/2.0, 1.0um பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, 1.2um பிக்சல்
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, 1.0um பிக்சல்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3060 எம்ஏஹெச் பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0

நோக்கியா X6 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 32 ஜிபி மெமரி) விலை 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,830) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 (4 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1499 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,980) என்றும், நோக்கியா X6 (6 ஜிபி ரேம்+ 64 ஜிபி மெமரி) விலை 1699 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,090) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இதுவரை இரண்டு முறை ஃபிளாஷ் விற்பனை செய்யப்பட்டு இருக்கும் நோக்கியா X6 நொடிகளில் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சீன சந்தையில் புதிய நோக்கியா X6 ஸ்மார்ட்போன் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது.

நோக்கியா X6 சர்வதேச மாடல் மட்டுமின்றி நோக்கியா 2, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் மே 29-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டூயல் கேமரா செட்டப் கொண்ட நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனும் இதே விழாவில் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo