HMD Asha 505 போன் விரைவில் அறிமுகமாகும், பார்க்க Lumia போன்ற டிசைனில் இருக்கும் அறிமுகத்திற்க்கு முன்னே பல தகவல் லீக்

HIGHLIGHTS

HMD Global நிறுவனம், புகழ்பெற்ற Asha போனை நோக்கியா பிராண்டின் கீழ் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது

HMD Asha 505 என்று பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

சில அம்சங்களையும் டிசைன் வெளிப்படுத்தும் ஒரு புதிய தகவல் லீக் ஆகியுள்ளது

HMD Global நிறுவனம், புகழ்பெற்ற Asha போனை நோக்கியா பிராண்டின் கீழ் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த போனுக்கு HMD Asha 505 என்று பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் சில அம்சங்களையும் டிசைன் வெளிப்படுத்தும் ஒரு புதிய தகவல் லீக் ஆகியுள்ளது. இந்த போனின் தோற்றம் நோக்கியா லூமியாவைப் பின்பற்றி டிசைன் செய்யப்படும் .

HMD Asha 505 பற்றிய புதிய தகவலை, X என்ற சோசியல் மீடியா பக்கத்தில் உள்ள ஒரு தகவல் வழங்குநர் பகிர்ந்துள்ளார். இந்த போன் Cyan, Blue மற்றும் Pink ஆகிய கலர்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் கச்சிதமான டிசைனை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லீக் போஸ்டரில், போனின் பின்புறத்தில் மேலே ஒரு வட்ட டிசைன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

போனின் அம்சங்கள்

லீக் செய்த தகவல்களின்படி, HMD Asha 505 போனில் 5-இன்ச் HD டிஸ்ப்ளே இடம்பெறக்கூடும். டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க டிராகன்டெயில் கிளாஸ் வழங்கப்படும். இந்த போன் ஆக்டா-கோர் பிராசஸருடன் அறிமுகப்படுத்தப்படலாம். இது 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை சப்போர்ட் செய்யும். இந்த போன் ஆண்ட்ராய்டு 14 கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வழங்கப்படலாம். இந்த போனில் 3000mAh பேட்டரி மற்றும் USB டைப்-சி சார்ஜிங் வசதி இருக்கலாம். மேலும், இந்த போனில் 3.5mm ஜாக், GPS, டூயல் சிம் மற்றும் வைஃபை போன்ற அம்சங்களும் இடம்பெறலாம்.

HMD குளோபல் நிறுவனத்தின் இந்த போன் சமீபத்தில் ஒரு சான்றிதழ் தளத்தில் காணப்பட்டது. வரவிருக்கும் இந்த போன், HMD TA-1779 என்ற மாடல் நம்பருடன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இது முன்னர் HMD Asha 305 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. HMD-யின் வரவிருக்கும் இந்த போன் 4G மற்றும் LTE கனெக்ஷன் வசதிகளுடன் வரும். மேலும், இதன் ஹார்ட்வேர்களின் பல மாற்றங்கள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குறைந்த பட்ஜெட் பயனர்களை இலக்காகக் கொண்டிருக்கலாம்.

இதையும் படிங்க Android 17 யில் வந்துள்ள கார் க்ரேஸ் டிடக்ஷன் அம்சம், இது ஆபத்து வரும் முன்னே கண்டறியும் அது எப்படி?

இது 2012-ல் தொடங்கப்பட்டது.

நோக்கியா ஆஷா சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இது, முழு டச் ஸ்க்ரீனுடன் கூடிய நிறுவனத்தின் மிகவும் குறைந்த விலை போனாக இருந்தது. நோக்கியாவின் N மற்றும் E சீரிஸ் டச் ஸ்க்ரீன் போன்களின் பிலேக்ஷிப் விலையில் இருந்தன. இது 3-இன்ச் கெப்பாசிட்டிவ் LCD ஸ்க்ரீனை கொண்டிருந்தது. இந்தத் போனில் 2ஜி கனெக்ஷன் மற்றும் எட்ஜ் இன்டர்நெட் சப்போர்ட்டை வழங்கியது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :