Google யின் ஸ்மார்ட்போன் இனி பன்ச் ஹோல் டிஸ்பிளே உடன் வரும்.
கூகுள் நிறுவனமே புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை லீக் செய்து விட்டது.
ரென்டர் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் சமீபத்தில் பிஐஎஸ் சான்று பெற்றது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Surveyதற்சமயம் வெளியீட்டுக்கு முன் கூகுள் நிறுவனமே புதிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை லீக் செய்து விட்டது. கூகுள் அதிகாரப்பூர்வ விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 4ஏ அதிகாரப்பூர்வ ரென்டர் வெளியானது. ரென்டர் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்து உள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே
– ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
– 4 அல்லது 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வேரியண்ட்கள்
– 12 எம்பி பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– 3080 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
இதன் பேக் பேனல் பார்க்க பிக்சல் 4 போன்றே காட்சியளிக்கிறது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் மேல்புறத்தில் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், என்எஃப்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இதனால் முந்தைய பிக்சல் ஸ்மார்ட்போன்களை போன்று, புதிய மாடலில் பெரிய பெசல்கள் இருக்காது. இணையத்தில் லீக் ஆகி இருக்கும் ரென்டரில் கூகுள் பிக்சல் 4ஏ கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. மேலும் இதில் பச்சை நிற பவர் பட்டன், ஒற்றை செல்ஃபி கேமரா, பின்புறம் ஒற்றை கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய கூகுள் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இது ஐபோன் எஸ்இ 2020 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile