Google Pixel 4a 30 நிமிடங்களில் அத்தனை ஸ்மார்ட்போனயும் விற்று தீர்த்தது.

Google Pixel 4a 30 நிமிடங்களில்  அத்தனை ஸ்மார்ட்போனயும்  விற்று தீர்த்தது.
HIGHLIGHTS

புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது.

பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது

கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனினை ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் இன் போது பிளாஷ் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டது. 
 
மேலும் விரைவில் பிக்சல் 4ஏ விற்பனைக்கு வரும் என்றும் அதுபற்றிய விவரங்களை வெளியிடுவதாகவும் கூகுள் இந்தியா தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக பிக்சல் 4ஏ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 29,999 விலையில் விற்பனைக்கு வந்தது.

அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பிக்சல் 4ஏ விற்பனை துவங்கியது. எனினும், விற்பனை துவங்கிய அரை மணி நேரத்தில் பிக்சல்4ஏ விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனை கூகுள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறது.

பண்டிகை கால விற்பனை நிறைவுற்றதும், பிக்சல் 4ஏ மாடல் ரூ. 31,999 விலையில் விற்பனை செய்யப்படும் என கூகுள் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன் காரணமாக குறுகிய கால சலுகை வழங்கப்பட்டது.

GOOGLE PIXEL 4A சிறப்பம்சங்கள்

– 5.81 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ OLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
– அட்ரினோ 618 GPU
– டைட்டனம் எம் செக்யூரிட்டி சிப்
– 6 ஜிபி LPDDR4X ரேம்
– 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– ஆண்ட்ராய்டு 10
– 12.2 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS, EIS
– 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.0
– டூயல் சிம் ஸ்லாட் 
– கைரேகை சென்சார்
– 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
– யுஎஸ்பி டைப் சி
– 3140 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கும் பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார், 3140 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo