மே 8 GOOGLE PIXEL 3A மற்றும் 3A XL இந்தியாவில் அறிமுகமாகும் FLIPKART யில் டீசர்.

மே 8  GOOGLE PIXEL 3A மற்றும் 3A XL இந்தியாவில் அறிமுகமாகும்  FLIPKART யில் டீசர்.
HIGHLIGHTS

Google  அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை Google Pixel 3a மற்றும் 3a XL அறிமுகம் செய்ய இருக்கிறது, நிறுவனம்  Google I/O  அனுவல் டெவலப்பர்ஸ் கான்பரன்ஸ் மூலம் மே 7 அன்று நடக்கும் நிகழ்வின் போது  அறிமுகம் செய்யும்.

தற்சமயம் ப்ளிப்கார்ட் தனது வெப்சைட்டில் பிக்சல் 3A  மற்றும் பிக்சல் 3A XL ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மே 8 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்களின் புதிய டீசரையும் பதிவிட்டிருக்கிறது. டீசருடன் பிக்சல் 3A  மற்றும் 3A X ஸ்மார்ட்போன்களின் கேமரா அம்சம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

இதில் “பிக்சல் யுனிவர்சில் மே 8 ஆம் தேதி புதிதாக ஒன்று மிகப் பெரியதாக வெளியாக இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பிக்சல் ஸ்மார்ட்போனின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் குறைந்த வெளிச்சத்திலும் தலைசிறந்த போட்டோ எடுக்கும் கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் மேல்புறம் மற்றும் கீழ்பக்கம் மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்றொரு டீசர் பதிவிடப்பட்டுள்ளது.

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும். புகைப்படம் எடுக்க பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3XL மாடல்களில் வழங்கப்பட்டிருக்கும் 12.2 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. வைடு ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டா-கோர் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo