google event
Google அடுத்த மிக பெரிய நிகழ்வு Made by Google events, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் நிறுவனம் Google Pixel 11 சீரிஸ் அறிமுகம் செய்யும். இந்த நிகழ்வானது நியூயார்க் நகரத்தில் நடைபெற இருக்கிறது மேலும் இந்த நிகழ்வின் அறிமுக தேதி மற்றும் இந்த ஆண்டு Google புதுசா மக்களுக்கு என்ன கொண்டு வரபோகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
Google யின் Made by Google 2026 ஆசஸ்ட் 12 அன்று நியூயார்க் நேரத்தின் படி இந்த நிகழ்வு 6 pm EST நடைபெறும் ஆனால் இந்திய நேரப்படி காலை 3:30 am IST அதாவது ஆகஸ்ட் 13 தேதி நடைபெறும், இந்த நிகழ்வில் Pixel 11 டிவாஸ் அறிமுகம் செய்யும் இந்த நிகழ்வை Google யின் YouTube சேனல் அல்லது Google’ யின் வெப்சைட்டில் ஆன்லைன் நிகழ்வை நேரடியாக பார்க்கலாம்.
கடந்த ஆண்டு நினைவுகூர்ந்தால் Google Pixel 10 நிகழ்வு ஆகஸ்ட் 20, 2025 அமெரிக்காவில் நடைபெற்றது, மேலும் அந்த நிகழ்வில் Pixel 10 சீரிஸ் அறிமுகம் செய்தது.
Google யின் இந்த நிகழ்வில் Pixel 11 போன்கள் அறிமுகம் செய்யப்படும், மேலும் டீசரின் பிக்ஜர் படி Pixel 11 சீரிஸ் கீழ் Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL மற்றும் Pixel 11 Pro Fold ஆகியவை அறிமுகம் செய்யும்.
லீக் யின் படி இந்த ஆண்டு டிசைனில் மாற்றத்தை எதிர்ப்பார்க்கலாம், இதனுடன் இதில் Pixel 11 சீரிஸ் ப்ளாக் ப்ளாக் கேமரா-மாட்யூல் உடன் ஹோரிசாண்டல் கேமரா மாட்யூல் கொண்டிருக்கும், இதனுடன் இந்த Pixel 11 Pro Fold ரீ டிசைன் கேமரா பம்ப் இருக்கும்.
ஆனால் மிக பெரிய மாற்றய்ஹை நம்பினால், google இந்த போனில் LED லைட்ஸ் இந்த Pixel 11 டிவைஸ் போனில் நோட்டிபிகேஷன் கிடைக்கும் அதாவது இது Nothing போனை போலவே Glyph லைட்கள் கொண்டிருக்கும், ஆனால் Google யின் மிக பெரிய எதிர்பார்ப்பு இந்த முறை RGB லைட்டுடன் வரும்.
பிக்சல் 11 மற்றும் பிக்சல் 11 ப்ரோ ஆகியவை 6.3-இன்ச் OLED ஸ்க்ரீன்களை கொண்டிருக்கும் என்றும், பிக்சல் 11 ப்ரோ XL 6.8-இன்ச் OLED ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் 11 ப்ரோ ஃபோல்ட், 6.4-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8.0-இன்ச் உள் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என லீக்கள் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: Samsung யின் Galaxy Unpacked நிகழ்வுக்கு நாள் குருசாச்சு, இதில் என்னவெல்லாம் வரும் பார்க்கலாம் வாங்க
முழுமையான பிக்சல் 11 வரிசையும் கூகிளின் டென்சர் ஜி6 ப்ரோசெசரில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, TSMC-யின் 2nm செயல்முறையில் உருவாக்கப்பட்ட 7-கோர் சிப்செட் என கூறப்படுகிறது . பிக்சல் 10 வரிசையில் பயன்படுத்தப்பட்ட 3nm-அடிப்படையிலான டென்சர் ஜி5 உடன் ஒப்பிடும்போது, 2nm ப்ரோசெசர் மாறுவது பர்போமான்ஸ் மற்றும் பவர் திறனில் சில பெரிய அப்டேட்களை கொண்டுவரக்கூடும். மேலும், பிக்சல் 11 போன்கள் சாம்சங்கின் மோடமிற்குப் பதிலாக MediaTek M90 மோடமிற்கு மாறும் என்றும் கூறப்படுகிறது.
கேமராவை பொறுத்தவை பெரியதாக எந்த தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் Pixel 11 சீரிஸில் அதே Pixel 10 இருக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.