பக்கவான டீல் தூள் கிளப்பும் ஆபரின் கீழ் Google Pixel 10 போனில் அதிரடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் Google பிரியராக இருந்தால் இது உங்களுக்கு சூப்பர் சான்ஸ் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Google Pixel 10 வேற லெவல் டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இதன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை வெறும் ரூ,64,727க்கு வாங்கலாம் அதாவது இப்பொழுது இந்த போனில் ஒரே அடியாக ரூ,10,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ப்ரீமியம் கேமரா மற்றும் அட்வான்ஸ் AI அம்சம் ஆகியவை கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் இருக்கும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Google Pixel 10 டிஸ்கவுண்ட் நன்மை.

Google Pixel 10 இந்தியாவில் ₹75,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் இப்போது இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,64,727க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்தமாக ரூ,10,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கமுடிகிறது . இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay மூலம் கேஷ்பேக் நன்மை பெறலாம் இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்கப்படுகிறது.

Google Pixel 10 phone

Google Pixel 10 சிறப்பம்சம்.

இந்த ஸ்மார்ட்போனில் 6.3-இன்ச் ஆக்டுவா OLED டிஸ்ப்ளே உள்ளது, இது 20: 9 ரேசியோ 1080 x 2424 பிக்சல் ரெசளுஷன் கொண்டது. டிஸ்ப்ளேவின் பிக்சல் டென்சிட்டி 422 PPI ஆகும், மேலும் இது மென்மையான டிஸ்ப்ளே தொழில்நுட்பத்துடன் 60Hz முதல் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது . ஸ்க்ரீனை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ப்ரைட்னஸ் பற்றி பேசுகையில், இது 3,000 நிட்கள் வரை ஹை ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

ப்ரோசெசர் பொறுத்தவரை, புதிய கூகிள் டென்சர் ஜி5 சிப்செட் பிக்சல் 10 யில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 16 உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நிறுவனம் 7 ஆண்டுகள் வரை OS, பாதுகாப்பு மற்றும் பிக்சல் டிராப் அப்டேட்களை வழங்குவதாக உறுதியளிக்கிறது.

கேமராவைப் பற்றிப் பேசுகையில், பிக்சல் 10 போட்டோ எடுப்பதற்கு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் 48MP குவாட் PD வைட் கேமரா, 13MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 10.8MP டெலிஃபோட்டோ கேமரா உள்ளது, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து பின்புற கேமராக்களும் சூப்பர் ரெஸ் ஜூம் தொழில்நுட்பம் மூலம் 20x ஜூம் வரை வழங்குகின்றன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு இது 10.5MP இரட்டை PD முன் கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க இன்னிக்கு சேலில் தூள் கிளப்பும் ஆபர் Motorola யின் இந்த புதிய மாடலில் கம்மி விலையில் தூக்க சரியான நேரம்

பேட்டரியைப் பொறுத்தவரை, கூகிள் பிக்சல் 10 யில் 4970mAh பேட்டரி உள்ளது, இது 24 மணி நேரத்திற்கும் மேலான காப்புப்பிரதியை வழங்குகிறது. சார்ஜ் செய்வதற்கு, இது 30W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது (சார்ஜரைத் தனியாக வாங்க வேண்டும்). இது தவிர, போனில் 15W வரை வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்மார்ட்போனின் வலிமைக்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பயன்படுத்தப்பட்டுள்ளது, இது கீறல்-எதிர்ப்புத் தன்மையை அளிக்கிறது. மேலும், இந்த தொலைபேசி IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்றும் இது பிங்கர் -ரெசிஸ்டன்ட் பினிஷ் கொண்டுள்ளது. இணைப்பிற்காக, இந்த சாதனம் Wi-Fi 6E, புளூடூத் v6 மற்றும் NFC ஐ சப்போர்ட் செய்கிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :