Android 17 new update Tamil
Google அதிகாரபூர்வமாக அதன் Android 17 அறிமுகம் செய்தது இந்த புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டம் பல அசத்தலான AI அம்சங்கள், அட்வான்ஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்ஸ் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் சப்போர்ட் வழங்கும். புதிய Android 17 யில் Gemini AI, ஸ்க்ரீன் ரெக்கார்டிங் புதிய டூல்,கேமிங் ஆப்டிமைசேஷன் மற்றும் கால் ஸ்க்ரீனிங் போன்ற பல அம்சம் வழங்குகிறது, இருப்பினும் இந்த புதிய Android 17 அம்சம் முதலில் Pixel ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கிடைக்கும், அதன் பிறகு மெல்ல மெல்ல மற்ற Android போன்களுக்கு அப்டேட் ஆகும் இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.
Android 17 யில் வரும் பல மிக சிறந்த அம்சங்கள் மூலம் மல்ட்டி டாஸ்கிங் கன்டென்ட் சிறப்பாக்கும்
Omni வீடியோ உருவாக்கம்: பிக்சல் டிவைஸ்களில் உள்ள ஜெமினி ஆப், இப்போது ஜெமினி ஓம்னி மாடலைப் பயன்படுத்தி AI வீடியோக்களை உருவாக்க முடியும். பயனர்கள் தங்களின் சொந்தப் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது முன்பே இருக்கும் டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கலாம். தனிப்பயன் AI அவதார்களையும் உருவாக்க முடியும்.
AI மூலம் ம்யூசிக் உருவாக்குங்கள்: ஜெமினி இப்போது அசல் ம்யூசிக் தடங்களையும் உருவாக்கும் பவர் கொண்டது. பயனர்கள் ஒரு பாடல் விளக்கத்தை வழங்குவதன் மூலமோ அல்லது ஒரு படத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலமோ, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்படுத்தி பாடல்களையும் ம்யூசிக்கையும் உருவாக்கலாம்.
இந்தியாவில் Manual Call Screen அம்சம்: ஆண்ட்ராய்டு 17 உடன், மேனுவல் கால் சரிபார்ப்பு அம்சம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் அறியாத நம்பரிலிருந்து வரும் கால்களை , அவை வருவதற்கு முன்பே சரிபார்க்க முடியும்.
இருப்பினும், ஆண்ட்ராய்டு 17-இன் ஆரம்பப் வெர்ஷன் ஜெமினி இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. பல-படி ஆப் ஆட்டோமேஷன் மற்றும் குரோமில் உள்ள ஆட்டோ பிரவுஸ் போன்ற அம்சங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆதரிக்கப்படும் பிக்சல் சாதனங்களில் வழங்கப்படும். மேலும், கிரியேட் மை விட்ஜெட், இன்டெலிஜென்ட் ஆட்டோஃபில், ஜிபோர்டில் உள்ள ராம்ப்ளர் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு பிரத்தியேகமான இன்ஸ்டாகிராம் அம்சங்களும் வரும் மாதங்களில் வெளியிடப்படும்.
ஆண்ட்ராய்டு 17 அப்டேட், பிக்சல் 6 சீரிஸ் முதல் பிக்சல் 10 சீரிஸ் வரையிலான பல சாதனங்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. இவற்றில் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ, பிக்சல் 6a, பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் 7a, பிக்சல் டேப்லெட், பிக்சல் ஃபோல்ட், பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ, பிக்சல் 8a, பிக்சல் 9 சீரிஸ் மற்றும் பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் அடங்கும்.
இதையும் படிங்க ஆஃபர்லயே இது தான் சூப்பர், MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ, 9,000 மிக பெரிய டிஸ்கவுண்ட்