Google Pixel போன் பயனர்களுக்கு குட் நியூஸ், Android 17 அப்டேட் உடன் பல் AI அம்சங்கள் உங்க போனில் வந்தாச்சா

Google Pixel போன் பயனர்களுக்கு குட் நியூஸ், Android 17 அப்டேட் உடன் பல் AI அம்சங்கள் உங்க போனில் வந்தாச்சா

Google அதிகாரபூர்வமாக அதன் Android 17 அறிமுகம் செய்தது இந்த புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டம் பல அசத்தலான AI அம்சங்கள், அட்வான்ஸ்ட் செக்யூரிட்டி அப்டேட்ஸ் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் சப்போர்ட் வழங்கும். புதிய Android 17 யில் Gemini AI, ஸ்க்ரீன் ரெக்கார்டிங் புதிய டூல்,கேமிங் ஆப்டிமைசேஷன் மற்றும் கால் ஸ்க்ரீனிங் போன்ற பல அம்சம் வழங்குகிறது, இருப்பினும் இந்த புதிய Android 17 அம்சம் முதலில் Pixel ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கிடைக்கும், அதன் பிறகு மெல்ல மெல்ல மற்ற Android போன்களுக்கு அப்டேட் ஆகும் இதன் முழு தகவலை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Android 17 என்ன புதிய சிறப்பு

Android 17 யில் வரும் பல மிக சிறந்த அம்சங்கள் மூலம் மல்ட்டி டாஸ்கிங் கன்டென்ட் சிறப்பாக்கும்

  • Bubbles மல்ட்டி டாஸ்கிங் அம்சம்: இப்போது எந்தவொரு ஆப்பையும் ப்லோட்டிங் விண்டோவாக மாற்ற முடியும், இது ஒரே நேரத்தில் பல ஆப்களுடன் பணிபுரிவதை எளிதாக்குகிறது. இந்த அம்சம் குறிப்பாக போல்டபில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • Screen Reactions: : இந்த அம்சம் கன்டென்ட் க்ரீயேட்டர்ர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது, எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்களின் தேவையின்றி, பயனர்கள் ஸ்க்ரீன் ரேக்கர்டின்குடன் சேர்த்துத் தங்களின் சொந்த செல்ஃபி வீடியோக்களையும் ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது.
  • Foldable Gaming Mode:: போல்டபில் ஃபோனைப் பயன்படுத்தும் பயனர்கள், பிரிக்கப்பட்ட அமைப்பு, மேம்பட்ட கட்டுப்பாடுகள், குறைவான ஃபிரேம் டிராப்கள் மற்றும் சீரான பர்போமான்ஸ் போன்ற அம்சங்களுடன் ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தைப் பெறுவார்கள்.
  • செக்யூரிட்டியில் மிக பெரிய மாற்றம்: ஆண்ட்ராய்டு 17, தற்காலிக இருப்பிட அணுகல், தேர்ந்தெடுக்கப்பட்ட தொடர்புப் பகிர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் கண்டறிதல் போன்ற அம்சங்களைச் சேர்ப்பதன் மூலம், பயனரின் ப்ரைவசி மற்றும் செக்யூரிட்டி முன்னெப்போதையும் விட வலுப்படுத்துகிறது.

Gemini AI யில் கிடைக்கும் பல புதிய அம்சங்கள்

Omni வீடியோ உருவாக்கம்: பிக்சல் டிவைஸ்களில் உள்ள ஜெமினி ஆப், இப்போது ஜெமினி ஓம்னி மாடலைப் பயன்படுத்தி AI வீடியோக்களை உருவாக்க முடியும். பயனர்கள் தங்களின் சொந்தப் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது முன்பே இருக்கும் டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கலாம். தனிப்பயன் AI அவதார்களையும் உருவாக்க முடியும்.

AI மூலம் ம்யூசிக் உருவாக்குங்கள்: ஜெமினி இப்போது அசல் ம்யூசிக் தடங்களையும் உருவாக்கும் பவர் கொண்டது. பயனர்கள் ஒரு பாடல் விளக்கத்தை வழங்குவதன் மூலமோ அல்லது ஒரு படத்தை அடிப்படையாகப் பயன்படுத்துவதன் மூலமோ, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் பயன்படுத்தி பாடல்களையும் ம்யூசிக்கையும் உருவாக்கலாம்.

இந்தியாவில் Manual Call Screen அம்சம்: ஆண்ட்ராய்டு 17 உடன், மேனுவல் கால் சரிபார்ப்பு அம்சம் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் அறியாத நம்பரிலிருந்து வரும் கால்களை , அவை வருவதற்கு முன்பே சரிபார்க்க முடியும்.

இருப்பினும், ஆண்ட்ராய்டு 17-இன் ஆரம்பப் வெர்ஷன் ஜெமினி இன்டெலிஜென்ஸ் அம்சங்கள் இடம்பெறவில்லை என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. பல-படி ஆப் ஆட்டோமேஷன் மற்றும் குரோமில் உள்ள ஆட்டோ பிரவுஸ் போன்ற அம்சங்கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆதரிக்கப்படும் பிக்சல் சாதனங்களில் வழங்கப்படும். மேலும், கிரியேட் மை விட்ஜெட், இன்டெலிஜென்ட் ஆட்டோஃபில், ஜிபோர்டில் உள்ள ராம்ப்ளர் மற்றும் ஆண்ட்ராய்டுக்கு பிரத்தியேகமான இன்ஸ்டாகிராம் அம்சங்களும் வரும் மாதங்களில் வெளியிடப்படும்.

எந்தெந்த டிவைஸ்களுக்கு ஆண்ட்ராய்டு 17 அப்டேட் கிடைக்கும்?

ஆண்ட்ராய்டு 17 அப்டேட், பிக்சல் 6 சீரிஸ் முதல் பிக்சல் 10 சீரிஸ் வரையிலான பல சாதனங்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. இவற்றில் பிக்சல் 6, பிக்சல் 6 ப்ரோ, பிக்சல் 6a, பிக்சல் 7, பிக்சல் 7 ப்ரோ, பிக்சல் 7a, பிக்சல் டேப்லெட், பிக்சல் ஃபோல்ட், பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ, பிக்சல் 8a, பிக்சல் 9 சீரிஸ் மற்றும் பிக்சல் 10 சீரிஸ் மாடல்கள் அடங்கும்.

இதையும் படிங்க ஆஃபர்லயே இது தான் சூப்பர், MOTOROLA யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ, 9,000 மிக பெரிய டிஸ்கவுண்ட்

Android 17 அப்டேட் செய்வது எப்படி

  • பிக்ஸல் கஸ்டமர்கள் Settings சென்று > System > System update > என்பதை தட்டவும் அதன் பிறகு அப்டேட் ஆகிவிட்டதா என சரி பார்க்கவும்.
  • முதலில் Wi-Fi உடன் இணைக்கவும். பதிவிறக்க அளவு சுமார் 1.5GB ஆகும்.
  • இந்த வெளியீடு கட்டம் கட்டமாக நடைபெறும். அப்டேட் தோன்றவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் மீண்டும் சரிபார்க்கவும்.
  • பிக்சல் 9a-க்கான ஸ்டேண்டர்ட் வெர்ஷன் CP2A.260605.012 ஆகும்.
  • நீங்கள் ஆண்ட்ராய்டு 17 பீட்டாவில் இருந்தால், முதலில் ஆண்ட்ராய்டு பீட்டா திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஸ்டேபிள் OTA உங்கள் டிவைஸ் அழித்துவிடாது, ஆனால் ஒரு புதிய பீட்டா வெளியிடப்பட்ட பிறகு தவறான நேரத்தில் விலகினால், டிவைசை பேக்டரி ரீசெட் செய்ய

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile