மீண்டும் அதிரடி என்ட்ரி கொடுக்கும் Gionee இந்திய சந்தையில் விரைவில்

HIGHLIGHTS

Gionee மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது

டீசர் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பெரிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது

Gionee Maxஎனும் பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது

மீண்டும் அதிரடி என்ட்ரி  கொடுக்கும் Gionee இந்திய சந்தையில் விரைவில்

ஜியோனி நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி ஒரு ஆண்டு ஆகிவிட்டது. இந்நிலையில், ஜியோனி மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது. ரீ-என்ட்ரியை உறுதிப்படுத்தும் வகையில் ஜியோனி தனது புதிய ஸ்மார்ட்போன் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

டீசர் புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் ஸ்கிரீன், ஸ்மார்ட்போனின் கீழ்புறத்தில் பெரிய பெசல்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போனில் HD பிளஸ் ஸ்கிரீன் வழங்கப்படலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4500Mah பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஜியோனி மேக்ஸ் எனும் பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துடன் இதன் விலை ரூ. 6 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என ஜியோனி அறிவித்து உள்ளது. இந்தியாவில் ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாக இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile