iPhone 17 Pro Price cut before iphone 18 Pro launch tomorrow check price discount
நீங்கள் iPhone பிரியராக இருந்தால், Apple iPhone 17 Pro போனை இப்பொழுது இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Freedom Sale நடைபெற்று வருவதால் இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது இந்த போனில் அதன் ஒரிஜினல் விலையை விட 16,000ருபாய் டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,1,18,900க்கு வாங்கலாம்,. இந்த போனில் மிக சிறந்த அம்சமாக 6.3-இன்ச் OLED பேனல் மற்றும் A19 ப்ரோ சிப்செட் இருக்கிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க
Apple iPhone 17 Pro பிளிப்கார்டில் ரூ,1,26,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ஒரே அடியாக ரூ,8000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது , அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 1,18,900க்கு வாங்கலாம், இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்கினால் இன்னும் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனின் ஒரிஜினல் MRP விலை ரூ,1,34,900 ஆகும் இப்பொழுது ஆகா மொத்தம் இந்த போனில் 16,000ருபாய் டிஸ்கவுன்ட் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோவில் 120Hz ப்ரோமோஷன் தொழில்நுட்பத்துடன் கூடிய 6.3-இன்ச் OLED பேனல், எப்போதும் இயங்கும் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் பினிஷ் ஆகியவை உள்ளன. இது அலுமினிய சட்டத்தையும் கொண்டுள்ளது, A19 ப்ரோ சிப்செட்டால் இயக்கப்படுகிறது, மேலும் 12 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது . வெப்பத்தை நிர்வகிக்க உதவும் ஒரு பிரத்யேக வேப்பர் கூலிங் சேம்பர் இது கொண்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 39 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:பிச்சிகிது ஆபர் Realme யின் இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,19,000 குறைப்பு
இந்த சாதனம் மேம்படுத்தப்பட்ட 48MP டிரிபிள் ஃப்யூஷன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன், 48MP அல்ட்ராவைடு மற்றும் 48MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 8x ஆப்டிகல் ஜூம் மற்றும் 8K வீடியோ பதிவுக்கான சப்போர்டுடன் உள்ளன. இது 24MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது