இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் கோடைகாலத்தை முன்னிட்டு அதிரடி திட்டம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வெப்சைட்டில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்கும் விற்பனை திருவிழாவினை அடுத்த மாதம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டின் கோடைகாலத்தை  முன்னிட்டு அதிரடி திட்டம் அறிவித்துள்ளது

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வெப்சைட்டில் இந்த ஆண்டு கோடை காலத்தில் வியக்க வைக்கும் சலுகைகளை வழங்கும் விற்பனை திருவிழாவினை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆன்லைன் பிஸ்னஸ் துறையை சார்ந்த வல்லுநர்கள் அளித்திருக்கும் தகவல்களில் இரு நிறுவனங்களும் கிட்டதட்ட 70 முதல் 80% பொருட்களை வாங்கி குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஸ்மார்ட்போன்கள், டெலிவிஷன், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து வித பொருட்களுக்கும் சிறப்பு விற்பனை, அதிரடி தள்ளுபடி உள்ளிட்டவற்றை வழங்க பிளிப்கார்ட் மற்றும் அமேசான் திட்டமிட்டு வருவதாகவும், செலக்ட் செய்யப்பட்ட பொருட்களின் விலையை தள்ளுபடி காலத்தில் மட்டும் குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது

கோடை கால சிறப்பு விற்பனையில் ஆடைகளுக்கு 70 முதல் 80% வரையிலான தள்ளுபடி, ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் மின்சாதங்களுக்கு 10 முதல் 20% வரை கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. இந்திய ஆன்லைன் விற்பனையில் ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் சாதனங்கள் மட்டும் சுமார் 60% பங்கு வகிக்கிறது.

இத்துடன் கேஷ்பேக், வட்டியில்லா மாத தவனை (No  Cost  EMI ) முறை வசதி உள்ளிட்டவற்றை வழங்கவும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வெப்சைட்கள் திட்டமிட்டுள்ளன. விற்பனை திருவிழா நடைபெற இருப்பதை பிளிப்கார்ட் அதிகாரி உறுதி செய்திருக்கும் நிலையில், மற்ற விவரங்களை வழங்கவில்லை.

புதிய விற்பனை திருவிழா மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். இது எங்களின் பிக் பில்லியன் டேஸ் (Big billion days) விற்பனையின் சிறிய வெர்ஷனாக இறுக்கும் என அவர் தெரிவித்தார். இந்த விற்பனை திருவிழாவில் கோடை காலத்திற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் தொலைகாட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் இதர பிரிவுகளில் உள்ள சாதனங்களுக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile