உலகின் முதல் முறையாக 18000Mah பேட்டரி உடன் உருவாகும் அசத்தலான போன்..!

HIGHLIGHTS

எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

உலகின் முதல் முறையாக 18000Mah பேட்டரி  உடன்  உருவாகும்  அசத்தலான போன்..!

எனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்களும் அடங்கும். புதிய மொபைல் போன்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழா நடைபெறும் பார்சிலோனாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

எனெர்ஜைசர் மெபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 18,000 mah . பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்ச பேட்டரி கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.

இவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.

புதிய ஸ்மார்ட்போன்கள் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல், ஸ்கேனிங் வசதி மற்றும் 18,000 Mah . பேட்டரி கொண்டிருக்கும் என எனெர்ஜைசர் மொபைல் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. புதிய எனெர்ஜைசர் மொபைல்கள் நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாக இருக்கின்றன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile