Coolpad Note 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் Rs 8,999விலையில் வெளியானது

Coolpad Note 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் Rs 8,999விலையில் வெளியானது
HIGHLIGHTS

Coolpad Note 6 ஸ்னாப்ட்ரகன் 435 ப்ரோசெசர் மற்றும் இரட்டை செல்பி கேமரா உடன் இந்தியாவில் Rs 8,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

கூல்பேட் நிறுவனத்தின் புதிய நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆஃப்லைனில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோட் 6 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டராகன் 435 சிப்செட், ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகபைப்டங்களை எடுக்க 8 எம்பி செல்ஃபி கேமரா, 5 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா, ஃபிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் 4070 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

கூல்பேட் நோட் 6 சிறப்பம்சங்கள்:

– 5.5 இன்ச் 1920×1080 பிக்சல்ஃபுல் ஹெச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 435 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 7.1 நௌக்கட்
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது 5 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 4070 எம்ஏஹெச் பேட்டரி

கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் கொண்ட கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999 மற்றும் 4 ஜிபி ரேம் கொண்ட நோட் 6 ஸ்மார்ட்போனின் வலை ரூ.9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய கூல்பேட் நோட் 6 ஸ்மார்ட்போன் இந்தியா முழுக்க எட்டு மாநிலங்களில் 300-க்கும் அதிக ஆஃப்லைன் விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தமிழ் நாடு, டெல்லி, ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வெர்சன் உங்களுக்கு Rs 8,999 விலையில் இருக்கலாம் இது தவிர இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வெர்சன் விலை  Rs 9,999 இருக்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo