வாட்டர் ட்ராப் நோட்ச் உடன் Rs 5,999 விலையில் அறிமுகமானது Coolpad Cool 3 ஸ்மார்ட்போன்

வாட்டர் ட்ராப் நோட்ச் உடன் Rs 5,999 விலையில் அறிமுகமானது Coolpad Cool 3  ஸ்மார்ட்போன்
HIGHLIGHTS

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் Cool 3 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய Cool 3 ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் HD . பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில்  Cool 3  ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய  Cool 3  ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் HD . பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

போட்டோக்கள் எடுக்க 8 எம்.பி. பிரைமரி கேமரா, 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் செல்ஃபிக்களை எடுக்க 5 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் செல்ஃபி கேமராவுடன் பியூட்டிஃபை அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

 Coolpad Cool 3 ​சிறப்பம்சங்கள்:

– 5.71 இன்ச் 1520×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்
– 2 ஜி.பி. ரேம்
– 16 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 0.3 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah  பேட்டரி

இத்துடன் ஃபேஸ் அன்லாக் வசதியும், ஸ்மார்ட்போனின் பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் இரட்டை நிறம் கிளாஸி பேக் கவர் கொண்டிருக்கிறது. 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் 3000 Mah பேட்டரி மூலம் பவர் கொடுக்கப்பட்டுள்ளது .

விலை  மற்றும் விற்பனை 
இந்தியாவில் கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ரூபி பிளாக், ஓசன் இன்டிகோ மற்றும் டியல் கிரீன் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo