Asus Zenfone7 விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Asus Zenfone7 விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

சென்ஃபோன் 7 அல்லது 7இசட் ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் கீக்பென்ச் வலைதளத்தில் லீக்

புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

Asus நிறுவனத்தின் சென்ஃபோன் 7 அல்லது 7இசட் ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்துள்ளது. 

இது சென்ஃபோன் 7 அல்லது 7இசட் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் புதிய ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புதிய அசுஸ் ஸ்மார்ட்போன் சிங்கிள்-கோர் டெஸ்டிங்கில் 973 புள்ளிகளையும், மல்டி-கோரில் 3346 புள்ளிகளையும் பெற்றுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சென்ஃபோன் இசட்எஃப் அல்லது 7இசட் எனும் பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் சென்ஃபோன் 7 எனும் பெயரில் அறிமுகமாகும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியான தகவல்களில் அசுஸ் சென்ஃபோன் 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் அசுஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சென்ஃபோன் 6 / 6Z மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். கீக்பென்ச் விவரங்களின் படி அசுஸ் இசட்எஃப் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பென்ச்மார்க்கிங் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo