அடுத்து கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கும் Asus
Asus நிறுவனத்தின் Rog 2 கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
Asus நிறுவனத்தின் Rog 2 கேமிங் ஸ்மார்ட்போன் ஜூலை 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ரோக் போன் 2 மாடலில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்குவதை அசுஸ் உறுதி செய்திருந்தது. இது ஸ்மார்ட்போனின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும்.
Surveyபுதிய ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமிங் அனுபவங்களை வழங்க அசுஸ் நிறுவனம் டென்சென்ட் உடன் இணைந்திருக்கிறது. ரோக் போன் 2 இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் இதன் துவக்க விலை CNY 4,399 (இந்திய மதிப்பில் ரூ. 44,400) முதல் துவங்கும் என கூறப்படுகிறது.
புதிய ROG போன் 2 ஸ்மார்ட்போன் நுபியா ரெட் மேஜிக் 3 மற்றும் பிளாக் ஷார்க் 2 போன்ற கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைகிறது. ரோக் போன் 2 ஜூலை மாதத்தில் அறிமுகமாகும் என அசுஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகமாகும் ரோக் போன் 2 மற்ற சந்தைகளில் வெளியாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்குவதை மட்டும் அசுஸ் உறுதி செய்திருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
