Apple விற்பனை மையங்களில் இருக்கும் Iphone மாடல்களை டிராக் செய்யும் முயற்ச்சி

Apple விற்பனை மையங்களில் இருக்கும் Iphone மாடல்களை டிராக் செய்யும் முயற்ச்சி
HIGHLIGHTS

ஆப்பிள் விற்பனை மையங்களில் இருந்து திருடப்பட்ட ஐபோன் மாடல்களை டிராக்

Apple ஸ்டோர்களில் இருந்து திருடப்படும் Iphone

அமெரிக்கா முழுக்க 100 விற்பனை மையங்களை ஆப்பிள் திறப்பதாக அறிவித்தது

அமெரிக்காவில் கடும் போராட்டங்களுக்கு இடையே ஆப்பிள் விற்பனை மையங்களில் இருந்து திருடப்பட்ட ஐபோன் மாடல்களை டிராக் செய்ய துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க விற்பனையகங்களில் திருடப்பட்ட ஐபோன் மாடல்களின் புகைப்படங்களை பலர்  ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தயவு செய்து ஆப்பிள் வால்நட் ஸ்டிரீட் வந்துவிடுங்கள். இந்த சாதனங்கள் டிராக் செய்யப்பட்டு அவை செயலிழக்க செய்யப்படுகின்றன. இத்துடன் உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்.

வழக்கமாக  ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து திருடப்படும் ஐபோன்களை ஆப்பிள் ஸ்டோர் வெளியில் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஐபோன்களில் பிரத்யேக டிராக்கிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும். இந்த மென்பொருள் கொண்டு திருடப்பட்ட ஐபோன்களை ஆப்பிள் டிராக் செய்துவிடும்.

போலீஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தை தொடர்ந்து ஐபோன்கள் திருடப்பட்டன. ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராக அமெரிக்கா முழுக்க கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்பிள் ஸ்டோர்கள் மட்டுமின்றி போர்ட்லாந்து மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் முழுக்க பல்வேறு விலை உயர்ந்த கடைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

ஆப்பிள் விற்பனை மையங்கள் மார்ச் மாத மத்தியில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டுள்ளது. எனினும், கடந்த வாரம் அமெரிக்கா முழுக்க 100 விற்பனை மையங்களை ஆப்பிள் திறப்பதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நியூ யார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஐபோன்கள் திருடப்பட்டன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo