2020 iPhone 5G விலை அதிகமாக இருக்கலாம்

2020 iPhone  5G விலை அதிகமாக இருக்கலாம்
HIGHLIGHTS

புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக பேட்டரி பாதுகாப்பு மாட்யூல் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஆப்பிளின் பிரீமியம் ஐபோன்கள் ஏற்கனவே உலகின் மிக விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆப்பிள் 5 ஜி இணைப்புடன் அறிமுகம் செய்யப்படும் 2020 ஐபோன்களின் விலை முந்தைய சாதனங்களை விட அதிகமாக இருக்கும் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள மாடல்கள் குறித்து ஆப்பிள் எதுவும் கூறவில்லை, ஆனால் 5 ஜி இணைப்பு பயனர்கள் இவற்றைப் பெறுவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன்களில் 5ஜி சார்ந்த உபகரணங்கள் சாதனத்தின் விலையை உயர்த்த காரணமாக அமையும் என்ற நிலையிலும், புதிய ஐபோன் மாடல்களின் விலை அதிகளவு உயர்த்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 5ஜி உபகரங்கள் புதிய ஐபோன்களின் விலை 30 முதல் 100 டாலர்கள் வரை விலை உயர்வுக்கு வழிவகை செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

அளவு குறையும் பட்சத்தில் பேட்டரி திறனும் அதிகரிக்கப்படலாம். அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன்கள் 5.4 இன்ச், இரண்டு 6.1 இன்ச் மற்றும் 5ஜி வசதி கொண்ட மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக பேட்டரி பாதுகாப்பு மாட்யூல் ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போதைய மற்றும் பழைய ஐபோன்களில் பயன்படுத்தப்படுவதை விட 50 சதவீதம் சிறிய மற்றும் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo