Iphone XS மற்றும் Iphone XS மேக்ஸ் ரெட் எடிசன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது..!

Iphone  XS மற்றும் Iphone XS  மேக்ஸ் ரெட் எடிசன் விரைவில் அறிமுகமாகும் என தகவல்  வெளியாகியுள்ளது..!
HIGHLIGHTS

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் ரெட் வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன்களின் ரெட் வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது சாதனங்களை சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் இருந்து வெளியாகியுள்ளது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் புதிய வடிவமைப்பில் சிவப்பு நிற எடிஷன்களாக அறிமுகமாகும் முதல் ஐபோன்களாக ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மாடல்கள் இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ரெட் எடிஷன்களை அறிமுகம் செய்தது.

புதிய ரெட் எடிஷன் மூலம் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள் விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என வெளிப்படையாக அறிவித்திருந்தது. 

முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி சிறப்பு நிகழ்ச்சியை நடத்த இருப்பதாகவும் இந்த நிகழ்வு ஆப்பிள் பார்க் வளாகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஆப்பிள் தனது புதிய செய்தி சந்தா திட்டத்தை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் சீனாவில் மட்டும் புதிய ரெட் ஐபோன்கள் சீனா ரெட் என்ற பேனரில் வெளியாகும் என கூறப்படுகிறது. மற்ற சந்தைகளில் புதிய ரெட் ஐபோன்கள் பிராடக்ட் ரெட் என்ற பேனரில் அறிமுகமாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo