iPhone SE 3 கொஞ்சம் லேட் ஆகினாலும் குறைந்த விலையில் அசத்தலாக அறிமுகமாகும்

HIGHLIGHTS

iPhone SE 3 அல்லது iPhone SE + 5G அறிமுகப்படுத்தப்படும்!

ஏப்ரல் அல்லது மே மாதத்தில் அறிமுகமாகும்

A15 Bionic CPU கொடுக்கலாம்

இந்த ஆண்டு ஆப்பிளின் அடுத்த குறைந்த  விலை ஐபோன் அதாவது iPhone SE 3 அல்லது iPhone SE + 5G அறிமுகப்படுத்தப்படலாம். ஒரு புதிய லீக் படி iPhone SE 3 இன் உற்பத்தி இந்த மாதம் தொடங்கும். ஆனால் அதன் வெளியீட்டு தேதி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இருக்கும். iPhone SE 3 ஐ iPhone SE + 5G என்றும் அழைக்கப்படுகிறது. ஆப்பிளின் A15 Bionic CPU இந்த போனில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், இதன் வடிவமைப்பு iPhone SE (2020) போன்றே இருக்கும்.

இந்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த குறைந்த விலை ஐபோன் வெளியாகலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வரிசையில் சக்கைபோடுபோட்ட ஐபோன் எக்ஸ் ஆர் டிசைனை, புதிய ஐபோன் எஸ்இ 3 கொண்டுள்ளதால், நாட்ச் ஸ்க்ரீன் இதில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், குறைந்தளவு பெசல்களே இந்த ஸ்மார்ட்போன் திரையில் இருக்கும் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

இந்த புதிய குறைந்த விலை ஐபோனில், டச் ஐடி கொடுக்கப்படாது. பேஸ் அன்லாக் அல்லது கடவுசொல் மூலமாக மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை திறக்க முடியும். இதற்காக, இரவு நேரங்களிலும் தெளிவாக முகத்தைக் கண்டறியும் கேமரா முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தெளிவான செல்பி எடுக்கவும் பயனர்களுக்கு உதவும்.

ஐபோன் எஸ்இ 3 (iPhone SE 3) ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேமும், 128ஜிபி ஸ்டோரேஜும் இருக்கும் என்று தெரிகிறது. ஏ15 பயோனிக் சிப் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தலைமுறைக்கான 5ஜி ஆதரவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமராவைப் பொருத்தவரை, பின்பக்கம் 12 மெகாபிக்சல் ஒற்றைக் கேமராவுடன் ஐபோன் எஸ்இ 3 உள்ளது. இதனைக் கொண்டு 4k தரத்திலான வீடியோக்களை பயனர்கள் எடுக்க முடியும். இந்த கேமராவில் தெளிவான படங்களை எடுக்க ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யூஎஸ்பி டைப்-சி இணைப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என கருதப்படுகிறது. 6” அங்குல எல்சிடி ஸ்க்ரீனுடன்  வரும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ. 30,000க்கு இதன் தொடக்க விலை இருக்கும் என்று நம்பப்படும் நிலையில், கூடுதலாக ஐபோன் எஸ்இ ப்ளஸ் மாடலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய 27” அங்குல ஐமேக், எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் சிப்செட்கள் கொண்ட பிரீமியம் மேக் மினி மாடல்களையும் ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :