Iphone SE 2020 ரூ. 3600 கேஷ்பேக் உடன் மே 20 விற்பனைக்கு வருகிறது.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2020 கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 42,500 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன் ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ. 3600 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டது.
Surveyதற்சமயம் இந்தியாவில் ஐபோன் எஸ்இ 2020 மே 20 தேதி மதியம் 12 மணி முதல் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆப்பிள் விநியோகஸ்தரான ரெடிங்டன் புதிய ஐபோன் நாடு முழுக்க சுமார் 3500-க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்களும் இதே தேதியில் புதிய ஐபோன் விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile