புதிய ஐபோன் SE சிறப்பம்சத்தை லீக் செய்துள்ளது.சீனா
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ ஒருவழியாக வெளியிடப்பட்டு விட்டது. புதிய ஐபோன் எஸ்இ மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் சிறிய ஐபோன் ஆகும்.
Surveyபுதிய ஐபோன் எஸ்இ மாடலில் ஐபோன் 11 சீரிஸ்களில் வழங்கப்பட்ட ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு பார்க்க ஐபோன் 8 போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ வெளியிடப்பட்டுவிட்ட நிலையிலும், அதன் ரேம் மற்றும் பேட்டரி திறன் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.
ஐபோன் 8 மாடலில் 2 ஜிபி ரேம், ஐபோன் 11 மாடலில் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.எனினும், சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் புதிய ஐபோன் எஸ்இ ரேம் மற்றும் பேட்டரி விவரங்கள் தெரியவந்துள்ளது. அதன்படி ஆப்பிள் ஐபோன் எஸ்இ மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 1821 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஐபோன் எஸ்இ மாடலில் 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா ஸ்கிரீன், ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐபோன் 11 மாடலில் வழங்கப்பட்டு இருந்த ஏ13 பயோனிக் சிப்செட் புதிய ஐபோன் எஸ்இ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பேட்டரியை பொருத்தவரை ஐபோன் 8 மாடலில் 1821 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் ரேம் ஐபோன் 8 மாடலை விட அதிகமாகவும், பேட்டரி ஒரே அளவிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
கிளாஸ் மற்றும் அலுமினியம் டிசைன் கொண்டிருக்கும் புதிய ஐபோன் எஸ்இ மாடலில் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 7 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி திறன் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது ஐபோன் 8 மாடல் வழங்கும் அளவிலான பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile