ஐபோன் X தோற்றத்தில் உருவாகும் Apple iPhone SE (2018)

HIGHLIGHTS

சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது.

ஐபோன்  X  தோற்றத்தில் உருவாகும் Apple iPhone SE (2018)

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், எஸ்இ ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் ஐபோன் எஸ்இ 2 அம்சங்கள், கான்செப்ட் மற்றும் ரென்டர்கள் லீக் ஆகிவருகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போன் ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இவ்விழாவில் புதிய ஐபோன் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் ஸ்மார்ட்போன் ஐபோன் எஸ்இ (2018) என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டு இருக்கும் ஐபோன் எஸ்இ 2 ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் பார்க்க ஐபோன் X போன்று காட்சியளிக்கிறது. புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலில் முன்பக்கம் நாட்ச் மற்றும் பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. 

குறிப்பாக ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ 2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.

மேலும் புதிய எஸ்இ ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile