Apple iPhone 17 Pro Max அறிமுக தேதி மற்றும் அத்தனை தகவலும் வெளியானது
iPhone 17 சீரிஸ் உலகளவில் சந்தையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும்
Apple iPhone 17 Pro Max போன் செப்டம்பர் 8 iPhone 17 Air, iPhone 17, மற்றும் iPhone 17 Pro பற்றிய பல லீக்
Apple இந்த அறிமுகத்தை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
Apple அதன் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட iPhone 17 சீரிஸ் உலகளவில் சந்தையில் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும், இருப்பினும் இந்த போன் அறிமுகத்திற்கு 1 மாதம் இருந்தாலும் அதை பற்றி பல தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது அதில் டாப் மாடல் ஆன iPhone 17 Pro Max போனை பற்றி பல வதந்தி இருக்கிறது இதன் பர்போமான்ஸ், டிசைன், கேமரா, மற்றும் பல அம்சங்கள் அப்க்ரேட் செய்யப்பட்டிருக்கும்.
SurveyApple யின் லீக் பற்றி பேசினால் இதன் முக்கிய மாற்றமாக ஒரு புதிய ரெக்டங்குளர் கேமரா இருக்கும், இதனுடன் இதில் பிளாஷ் இடத்தை மாற்றியுள்ளது, கூடுதலாக இந்த போனில் பெரிய ஸ்க்ரீன்,தெளிவான கேமரா மற்றும் பல அம்சங்கள் இருக்கும் மேலும் Apple iPhone 17 Pro Max விலை கேமரா மற்றும் பல தகவல்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
Apple iPhone 17 Pro Max அறிமுக தேதி.
Apple iPhone 17 Pro Max போன் செப்டம்பர் 8 iPhone 17 Air, iPhone 17, மற்றும் iPhone 17 Pro பற்றிய பல் லீக் தகவல் வெளியாகியுள்ளது, அதன் பிறகு இந்த போனை செப்டம்பர் 19 முதல் வாங்கலாம், இருப்பினும் Apple இந்த அறிமுகத்தை பற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
Apple iPhone 17 Pro Max டிசைன்.
ஆன்லைனில் வெளியாகும் ரெண்டர்களின்படி, ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஒரு ரெக்டங்குல் டிசைன் டிசைன் வைக்கப்பட்டுள்ள பழக்கமான மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஃபிளாஷ் மற்றும் LiDAR ஐ வலது பக்கத்தில் வைக்கலாம். கூடுதலாக, இந்த போனில் டைட்டானியம் பிரேம் நீக்கி அலுமினிய பிரேம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Samsung யின் இந்த போனில் மெகா ஆபர் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூ,47,000 டிஸ்கவுண்ட்
Apple iPhone 17 Pro Max சிறப்பம்சம்.
Apple iPhone 17 Pro Max போனில் 6.9-inch OLED ஸ்க்ரீன் உடன் ProMotion டெக் அம்சம் கொண்டிருக்கும்.மேலும் இந்த போனில் லேட்டஸ்ட் A19 Pro சிப் உடன் 12GB ரேம் வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் வேப்பர் கூலிங் சேம்பர் உடன் வருகிறது மேலும் iPhone 16 Pro Max போனை ஒப்பிடும்போது மிக சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும்.
இதில் போட்டோக்ரபிக்கு இந்த போனில் 48MP மெயின், 48MP அல்ட்ராவைட் மற்றும் 48MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது மற்றும் செல்பிக்கு முன்பக்கத்தில் 24MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
Apple iPhone 17 Pro Max விலை தகவல்.
இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸின் விலை சுமார் ரூ.1,64,900 என கூறப்படுகிறது. நினைவுகூர, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் விலை ரூ.1,44,900 ஆகும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile