பல அசத்தலான அம்சங்கள் கொண்டிருக்கும் ஆப்பிள் iPhone 12Pro.

HIGHLIGHTS

புதிய விவரங்களின் படி ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது

பல அசத்தலான அம்சங்கள் கொண்டிருக்கும் ஆப்பிள் iPhone 12Pro.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஐபோன் 12 சீரிஸ் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்போதைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுவதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் இந்த பாணியை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளேக்களில் ப்ரோமோஷன் தரத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.

புதிய விவரங்களின் படி ஐபோன் 12 ப்ரோ மாடலில் அதிக ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஐபேட் ப்ரோ போன்றே புதிய ஐபோன் 12 ப்ரோ மாடலிலும் ப்ரோ மோஷன் டிஸ்ப்ளே வழங்கப்படுவதாக தெரிகிறது. அதிகபட்சம் புதிய ஐபோனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இத்துடன் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் வழங்குவதால், பேட்டரி திறனை அதிகப்படுத்தவும் ஆப்பிள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய ஐபோனின் பேட்டரி அளவுக்கு ஏற்ப டிஸ்ப்ளே 60 ஹெர்ட்சில் துவங்கி 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரிஃப்ரெஷ் ரேட்களில் ஒன்றை தேர்வு செய்ய முடியும் என கூறப்படுகிறது. 

இத்துடன் 5ஜி கனெக்டிவிட்டி, மேம்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம், சிறிய நாட்ச் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது. இதுதவிர ஃபேஸ் ஐடி சற்று அகலமான ஆங்கில் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் ஐபோன் வேகமாக அன்லாக் செய்ய முடியும். 
அதன்படி 6.7 இன்ச் ஐபோன் 12 ப்ரோ மாடலில் 4400 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile