APPLE IPHONE 12 PRO மற்றும் IPHONE 12 PRO MAX அதிகாரபூர்வமாக இந்தியாவில் அறிமுகம்

Updated on 14-Oct-2020
HIGHLIGHTS

ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது

ந்த மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து உள்ளது. இரு மாடல்களிலும் தலைசிறந்த கேமரா மற்றும் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

– 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
– 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
– ஐஒஎஸ் 14
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல்
– 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5P லென்ஸ்
– 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2
– லிடார் ஸ்கேனர்
– 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா, f/2.2
– 5ஜி (sub‑6 GHz), ஜிகாபிட் கிளாஸ் எல்டிஇ, 802.11ax வைபை 6, ப்ளூடூத் 5
– லித்தியம் அயன் பேட்டரி
– மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங்
– பாஸ்ட் சார்ஜிங் வசதி

மேலும் புதிய ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் லிடார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது கேமரா மற்றும் ஆக்மென்ட்டெட் தொழில்நுட்பங்களை மிக சீராக இயக்க வழி செய்கிறது. இந்த மாடல்களிலும் ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை மற்றும் விற்பனை தகவல்.

இந்திய சந்தையில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 129900 என்றும் 256 ஜிபி மாடல் ரூ. 139900 என்றும் 512 ஜிபி மாடல் விலை ரூ. 159900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது.

APPLE IPHONE 12 PRO சிறப்பம்சங்கள்.

ஐபோன் 12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடலில் 6.7 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. 
 
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12 எம்பி வைடு கேமரா மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படங்களை வழங்குகிறது. இத்துடன் ட்ரூ டெப்த் செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

APPLE IPHONE 12 PRO விலை  தகவல்.

புதிய ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. ஐபோன் 12 ப்ரோ மாடல் விலை 999 டாலர்கள் என்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல் விலை 1099 டாலர்கள் முதல் துவங்குகிறது. 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :