கொரோனா வைரஸ் காரணமாக 11 Apple Branch மூடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்  காரணமாக 11 Apple Branch மூடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

coronavirus தாக்குதலுக்கு அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 22 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தாக்குதலுக்கு அமெரிக்காவில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
இதற்கிடையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த மார்ச் மாதத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டன. 

இந்நிலையில், கொரோனா தீவிரமடைந்துவரும் அரிசோனா, புளோரிடா, வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினா ஆகிய 4 மாகாணங்களில் திறக்கப்பட்ட 11 கிளைகளை ஆப்பிள் நிறுவனம் மீண்டும் மூடியுள்ளது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனமும் அமெரிக்காவில் செயல்பட்டுவந்த 271 கிளைகளையும் மூடியது. பின்னர் வைரசின் தாக்கம் சற்று குறைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்கட்டமாக 100 கிளைகளை மட்டும் மீண்டும் திறந்தது.

ஆனால் தற்போது, அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக அரிசோனா, புளோரிடா போன்ற மாகாணங்களில் கொரோனா பரவுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இந்த 4 மாகாணங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதால் அங்கு செயல்பட்டு வரும் 11 கிளைகளையும் தற்காலிகமாக மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மூடப்பட்ட கிளைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் குறித்து ஆப்பிள் நிறுவனம் எந்த தகவலும் தற்போதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo