Googleயின் AI இன்டிகிரேசன் உடன் புதிய ஆண்ட்ராய்ட் P பீட்டா அறிமுகம்

HIGHLIGHTS

Google யின் ஆண்ட்ராய்ட் P ஓபன் பீட்டா ப்ரோக்ராம் அறிமுகமாகியுள்ளது மற்றும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும், இதில் வரவிருக்கும் OnePlus 6 அடங்கும்.

Googleயின்  AI இன்டிகிரேசன் உடன் புதிய ஆண்ட்ராய்ட் P  பீட்டா அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு பி (Android P) இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று ஆன்ட்ராய்டு P பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பிராஜெக்ட் டிரெபிள் திட்டத்தினால் ஆன்ட்ராய்டு பி பீட்டா பதிப்பு சோனி, சியோமி, ஒப்போ, விவோ, எசென்ஷியல், நோக்கியா 7 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

ஆன்ட்ராய்டு பி பீட்டா சப்போர்ட் கொண்ட சாதனங்கள்:கூகுள் பிக்சல்
கூகுள் பிக்சல் XL,கூகுள் பிக்சல் 2,கூகுள் பிக்சல் 2 XL,சோனி எக்ஸ்பீரியா XZ2சியோமி Mi மிக்ஸ் 2S,நோக்கியா 7 பிளஸ்,ஒப்போ R15 ப்ரோ,விவோ X21,விவோ X21UD,ஒன்பிளஸ் 6, எசென்ஷியல் PH‑1 போன்றவை இதில் அடங்கியுள்ளது 

AI மூலம்  OS யில் இயங்க ஆரம்பித்துள்ளது 

ஆன்ட்ராய்டு P  இயங்குதளத்தில் வைபை RTT மூல் இன்டோர் பொசிஷனிங், டிஸ்ப்ளே கட்அவுட் அல்லது நாட்ச் சப்போர்ட், மேம்படுத்தப்பட்ட மெசேஜிங் அனுபவம், மல்டி-கேமரா சப்போர்ட், ஹெச்டிஆர் VP9 வீடியோ, HEIF இமேஜ் கம்ப்ரெஷன், பிட்மேப்களுக்கு இமேஜ் டீகோடர் மற்றும் டிராயபல்ஸ், ஜாப் ஷெட்யூலரில் டேட்டா காஸ்ட் சென்சிடிவிட்டி, அடாப்டிவ் பேட்டரி, புதிய ஜெஸ்ட்யூர்கள், நேவிகேஷன் சிஸ்டம்கள், செயற்கை நுண்ணறி சார்ந்து இயங்கும் ஆப் ஆக்ஷன்கள், ஸ்லைசஸ், பேக்கிரவுன்டு ரெஸ்ட்ரிக்ஷன்கள், பயோமெட்ரிக் பிராம்ப்ட் மற்றும் பல்வேறு புதிய அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது. 

பிக்சல் சாதனங்களில் ஏற்கனவே ஆன்ட்ராய்டு பீட்டா திட்டத்தில் இருப்போருக்கு OTA அப்டேட் தானாக வழங்கப்படும். மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு டெவலப்பர்கள் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு லின்க்-களை பயன்படுத்தி கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo