சபாஷ் சரியான போட்டி ஏர்டெல் வழங்குகிறது ரூ. 97க்கு 2ஜிபி டேட்டா.

HIGHLIGHTS

பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 97 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது,

சபாஷ்  சரியான போட்டி  ஏர்டெல்  வழங்குகிறது  ரூ. 97க்கு 2ஜிபி  டேட்டா.

டெலிகாம் நிறுவனங்களில் தற்பொழுது கடுமையான போட்டியின் காரணமாக பல திட்டங்கள் குறைந்த விலையில் கொண்டு வந்து  கொண்டே இருக்கிறது, அதாவது குறைந்த விலையில் அதிக  டேட்டா  மற்றும் அன்லிமிட்டட் வாய்ஸ் காலிங், தினமும் 100 SMS, போன்றவை  வழங்குகிறது, பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 97 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு 2 ஜி.பி. டேட்டா 14 நாட்களுக்கு வழங்கப்படுகிறது, இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS. உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

தற்சமயம் புதிய சலுகை செலக்ட் செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏர்டெல் ரூ. 97 காம்போ ரீசார்ஜ் சலுகையை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா மற்றும் 350 நிமிடங்களுக்கு வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்பட்டது. எனினும், அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் இச்சலுகை நீக்கப்பட்டு விட்டது.

முதற்கட்டமாக ஏர்டெல் ரூ. 97 சலுகை ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்படுகிறது. இச்சலுகையின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். புதிய சலுகையை ஏர்டெல் ஸ்பெஷல் ரீசார்ஜ் STV. காம்போ பிரிவில் வழங்கப்படுகிறது..

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 148 விலையில் பிரீபெயிட் சலுகை ஒன்றை அறிவித்தது. இதில் பயனர்களுக்கு 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile