என்ட்ரி லெவல் 2018 ஐபோன் பற்றிய அருமையான தகவல்

HIGHLIGHTS

ஆப்பிள் 6.1 இன்ச் ஐபோன் சார்ந்த புதிய தகவல்களை ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.

என்ட்ரி லெவல் 2018 ஐபோன் பற்றிய அருமையான தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 6.1 இன்ச் ஐபோனின் அம்சங்கள் சார்ந்த விவரங்களை பிரபல ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டிருக்கிறார்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் புதிய 6.1 இன்ச் ஐபோனில் உறுதியான இம்பேக்ட்-ரெசிஸ்டண்ட் கிளாஸ் வழங்கப்பட இருப்பதாக குறி்ப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த மொபைலில் கவர் கிளாஸ் சென்சார் (CGS) தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் ஐபோனின் டச் மாட்யூலினை டிஸ்ப்ளே பேனலில் இருந்து சர்ஃபேஸ் கிளாசுக்கு மாற்றும். இதனால் டிஸ்ப்ளே அதிக உறுதியுடனும், மெல்லியதாகவும் இருக்கும். இதனுடன் மற்றொரு மெல்லி ஃபிலிம் சென்சார் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது என்ன செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

புதிய தொழில்நுட்பம் வழங்கப்படுவதால் டச் பேனலின் விலை 15% வரை அதிகமாக இருக்கும், அந்த வகையில் 23 டாலர்களில் இருந்து 26 டாலர்கள் வரை செலவிட வேண்டும். இதனால் புதிய ஐபோனில் இருந்து 3D டச் அம்சத்தை ஆப்பிள் நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-ம் ஆண்டில் வெளியாக இருக்கும் மற்ற இரண்டு ஐபோன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 3D டச் அம்சம் வழங்கப்படும். மூன்று புதிய ஐபோன்களிலும் CGS தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இது 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.

புதிய மெல்லிய ஃபிலிம் சென்சார் 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் வரும் ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட முதல் ஐபோனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile