10 Or G2 ஸ்மார்ட்போன் 5000mah பேட்டரி உடன் அறிமுகம்

10 Or G2 ஸ்மார்ட்போன் 5000mah பேட்டரி  உடன் அறிமுகம்

10 Or G2  (டெனார்) பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 10.ஆர் ஜி2 என அழைக்கப்படுகிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த 10.ஆர் ஜி ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட மாடல் ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

10 Or G2 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் 2.5D டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ்
– ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் + மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட்
– 16 எம்.பி. பிரைமரி கேமரா
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 12 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை
– 5000 Mah பேட்டரி
– 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போனில் 6.18 இன்ச் FHD பிளஸ் 2246×1080 பிக்சல் 19:9 2.5D டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 ஆக்டா-கோர் பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக வெளிச்சமுள்ள பகுதிகளிலும், குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் சீராக இயங்கும். செல்ஃபி எடுக்க 12 எம்.பி. கேமரா மற்றும் ஃபிளாஷ் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. 

புதிய 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனுடன் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் டுவிலைட் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே 2019 போது துவங்குகிறது. இந்தியாவில் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo