XIAOMI மீண்டும் அசுர விற்பனை உலக முழுவதும் 129 நாடுகளில் REDMI NOTE 7 SERIES யின்10 MILLION சாதனம்
சியோமியின் ரெட்மி பிராண்டு தனது ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனினை ஜனவரி மாதத்தில் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் பின் பிப்ரவரி மாதத்தில் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
Surveyதற்சமயம் சந்தையில் விற்பனைக்கு வந்து வெறும் 129 நாட்களில் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையை கடந்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வெறும் 55 நாட்களில் அந்நிறுவனம் சுமார் 60 லட்சம் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
முன்னதாக ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன் இரண்டு மாதங்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் இந்திய சந்தையில் விற்பனையானதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. மார்ச் 29 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்குள் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது.
இதுதவிர சியோமி நிறுவனம் தனது ரெட்மி K20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்கிறது. இதே ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile