Xiaomi Mi Band 3 அமேசானில் 1,999ரூபாயில் விற்பனைக்கு கிடைக்கிறது…!
புதிய Mi பேன்ட் 3 மாடலில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது
புதிய Mi பேன்ட் 3 மாடலில் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் அல்லது SMS மெசேஜ்களில் அதிக எழுத்துக்களை டிஸ்ப்ளே செய்யும். முந்தைய Mi பேன்ட் 2 சாதனத்தில் 0.42 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. புதிய Mi பேன்ட் சாதனத்தில் 5ATM வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீருக்கு அடியில் 50 மீட்டர் ஆழத்திலும் பேன்ட் பயன்படுத்த முடியும்.
Surveyபுதிய Mi பேன்ட் 3 சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவிட்டி டிராக்கிங் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் ஓட்டப்பயிற்சி, மிதிவண்டி, நடைபயிற்சி மற்றும் இதர நடவடிக்கைகள் குறித்த ரியல்-டைம் டேட்டாவை வழங்குகிறது. முன்பக்கம் பட்டன் புதிய பேன்ட்-லும் வழங்கப்பட்டு இருககிறது. சியோமி Mi பேன்ட் 3 சாதனம் 20 நாட்கள் ஸ்டான்ட்-பை வழங்கும் 110 Mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி Mi பேன்ட் 3 சிறப்பம்சங்கள்:
– 0.78 இன்ச் OLED 128×80 பிக்சல் டிஸ்ப்ளே
– கீறல் விழாத கிளாஸ், ஆன்டி-ஃபிங்கர்ப்ரின்ட் கோட்டிங்
– போட்டோப்லெதிஸ்மோகிராஃபி (Photoplethysmography – PPG)
– இதய துடிப்பு சென்சார்
– உறக்கத்தை டிராக் செய்து, உடற்திறனை மானிட்டர் செய்கிறது
– செடன்ட்டரி ரிமைன்டர்
– 8.5 கிராம் அல்ட்ரா லைட் பாடி
– 5ATM (50 மீட்டர்) வாட்டர் ரெசிஸ்டன்ட்
– ப்ளூடூத் 4.2 LE, என்எஃப்சி (ஆப்ஷன்)
– 110 mah லி-ஐயன் பாலிமர் பேட்டரி
ஆபர்
இதனுடன் இதன் விலை பற்றி பேசினால் 1999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இதை BHIM UPI or RuPay கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் இதை பற்றிய கூடுதல் தகவலை பெற அமேசான் வெப்சைட் பாருங்கள்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile



