7700 Mah பேட்டரியுடன் புது LenovoTap P11 5ஜி டேப்லெட் அறிமுகம்.

HIGHLIGHTS

லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது

இது 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் P11 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்

லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட டேப் P11 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். முந்தைய மாடலை விட புது மாடலில் அதநவீன ஹார்டுவேர் வழங்கப்பட்டு இருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய லெனோவோ டேப் P11 5ஜி மாடலின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வெர்ஷன் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த டேப்லெட் ஸ்டாம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. விற்பனை லெனோவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

லெனோவோ டேப் P11 5ஜி டேப்லெட் சிறப்பம்சம்.

லெனோவோ டேப் P11 5ஜி மாடலில் 11 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உள்ளிட்ட சாதனங்களுக்கான சப்போர்ட் கொண்டுள்ளது. இது டூயல் டோன் பேக் பேனல், ஒற்றை கேமரா சென்சார் உள்ளது.

ஆடியோவை பொருத்தவரை லெனோவோ டேப் P11 5ஜி மாடல் குவாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சவுண்ட் டியுனிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புது டேப் P11 5ஜி மாடல் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர், அட்ரினோ 619 GPU, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த டேப்லெட் 7700 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப் சி போர்ட், 5ஜி, வைபை, ப்ளூடூத் 5.1 வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :