சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

திய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் 802.11 ac 2X2 ஜிகாபிட் வயர்லெஸ் LAN கார்டு கொண்டுள்ளது. இதனால் புதிய லேப்டாப்பில் நொடிக்கு 1.7 ஜிகாபைட் வேகம் வரை சீராக இயங்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இத்துடன் புதிய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு வசதியை அப்டேட் செய்யும் வகையில் சாம்சங் தனது ஃபிளாஷ் லேப்டாப்பில் அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு செட்டிங்கும் வழங்கியிருக்கிறது. புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 

பிங்கர்ப்ரின்ட் சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப்பில் பயனர்கள் தங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 

சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் ஃபிளாஷ் லேப்டாப் வழக்கமான மைக்ரோ எஸ்.டி. கார்டுகளை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் புகிய ஃபிளாஷ் லேப்டாப் மாடல்கள் வைட், சார்கோல் மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,20,000 வொன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo