Poco நிறுவனம் விரைவில் இந்தியாவில் லேப்டாப் அறிமுகப்படுத்தும்.

HIGHLIGHTS

போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும்

போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும்

Poco  நிறுவனம் விரைவில் இந்தியாவில்  லேப்டாப்  அறிமுகப்படுத்தும்.

போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இந்தியாவின் பிஐஎஸ் சான்று அளிக்கும் வலைதளத்தில் இருந்து லீக் ஆகி இருக்கிறது. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இரண்டு புது லேப்டாப் மாடல்களின் பேட்டரி முறையே R15B02W மற்றும் R14B02W எனும் மாடல் நம்பர்களுடன் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கின்றன. இவை போக்கோ பிராண்டிங் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இவை எம்ஐ லேப்டாப்களின் ரி-பிராண்ட் செய்யப்பட்டு போக்கோ லேப்டாப் மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

இதுதவிர ஏற்கனவே வெளியான தகவல்களில் போக்கோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதுவும் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

போக்கோ பிராண்டு இதுவரை ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் 2021 ஆண்டில் இந்த நிலை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்கோ லேப்டாப் மாடல்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகலாம் என தெரிகிறது. 

இந்த ஆண்டு சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் மற்றும் எம்ஐ நோட்புக் ஹாரிசான் எடிஷன் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்தது. போக்கோ லேப்டாப் மாடல்களின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo